Advertisement


விண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஜூலை 21, 2021 20:53
 Comments  
 


Windies, Australia, First One Day International Cricket, Starc
 

பிரிட்ஜ்டவுன்: விண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டார்க் ‘வேகத்தில்’ மிரட்ட ஆஸ்திரேலிய அணி 133 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் தலா 49 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஜோஷ் பிலிப் (39), பென் மெக்டெர்மாட் (28), மிட்சல் மார்ஷ் (20) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் அலெக்ஸ் கேரி (67), ஆஷ்டன் டர்னர் (49) நம்பிக்கை தர, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன் எடுத்தது.

 

பின் களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 49 ஓவரில் 257 ரன் எடுத்தால் வெற்றி  என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. சவாலான விரட்டிய விண்டீஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ எவின் லீவிஸ் (0), ஜேசன் முகமது (2), நிக்கோலஸ் பூரன் (0) அவுட்டாகினர். ஷிம்ரன் ஹெட்மயர் (11), டேரன் பிராவோ (2), ஜேசன் ஹோல்டர் (0) ஏமாற்றினர். கேப்டன் போலார்டு (56) ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஏமாற்ற விண்டீஸ் அணி 26.2 ஓவரில் 123 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 5, ஹேசல்வுட் 3 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?