Advertisement


கோப்பை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் ஏமாற்றம்

ஜூலை 21, 2021 20:48
 Comments  
 


Pakistan, T20 Cricket Series, England, Champion
 

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2–1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் (76) நம்பிக்கை தந்தார். கேப்டன் பாபர் ஆசம் (11), முகமது ஹபீஸ் (1) ஏமாற்றினர். பகார் ஜமான் (24) ஆறுதல் தர, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஹித் 4 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (64) நல்ல துவக்கம் தந்தார். ஜோஸ் பட்லர் (21), டேவிட் மலான் (31), கேப்டன் இயான் மார்கன் (21) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஹபீஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?