Advertisement


டென்னிஸ் பதக்கம் பறிபோனதா * பிரச்னை கிளப்பும் போபண்ணா

ஜூலை 20, 2021 22:48
 Comments  
 


India at Tokyo Olympic, Bopanna, sania mirza
 

புதுடில்லி: ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கான வீரர்கள் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக சீனியர் வீரர் ரோகன் போபண்ணா குற்றம்சாட்டியுள்ளார். இதனால் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனதாக சானியாவும் சாடியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி 33வது ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் பங்கேற்கிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா–அன்கிதா ரெய்னா ஜோடி கலந்து கொள்கிறது.

தேர்வில் குழப்பம்

ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான வீரர்கள் தேர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் போண்ணா– -திவிஜ் சரண் ஜோடியை இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரைத்தது. இவர்களுக்கு தகுதி பெற தேவையான புள்ளிகள் இல்லாததால், போபண்ணா–சுமித் நாகல் ஜோடியை பரிந்துரைத்தது. 

தேர்வுக்கான காலம் முடிந்த நிலையில், உடல்நலக்குறைவு தவிர வேறு எந்த காரணத்திற்காக ஜோடியை மாற்ற முடியாது என சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துவிட்டது. இதனால் போபண்ணாவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது.

இது குறித்து ‘டுவிட்டரில்’ போபண்ணா வெளியிட்ட செய்தியில்,‘வீரர்கள் பரிந்துரைக்கான காலக்கெடு கடந்த ஜூன் 22ல் முடிந்த நிலையில், என்னையும்–- சுமித் நாகலையும் ஏற்க சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மறுத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக கூறி சக வீரர்களையும், அரசையும், மீடியாவையும் இந்திய டென்னிஸ் சங்கம் தவறாக வழிநடத்திவிட்டது,’ என குற்றம்சுமத்தினார். தொடர்ந்து இந்திய டென்னிஸ் சங்க பொது செயலர் அனில் துபார் உடன் நடந்த வீடியோ உரையாடலையும் வெளியிட்டார். அதில் போபண்ணா–நாகல் ஜோடியின் தேர்வை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டதாக துபார் தெரிவிக்கிறார்.

இது குறித்து சானியா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘போபண்ணா புகார் உண்மையாக இருந்தால், தேர்வு குளறுபடி வெட்கக்கேடானது. போபண்ணா–சுமித் தேர்வானதாக சொன்னார்கள். போபண்ணாவும் நானும் கலப்பு இரட்டையரில் விளையாடி இருந்தால் பதக்கம் வென்று இருப்போம். அந்த வாய்ப்பு இப்போது பறிபோயிருக்கிறது,’என குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம்

இந்திய டென்னிஸ் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,‘முதலில் போபண்ணா–திவிஜ் சரண் பெயரை அனுப்பினோம். 

இவர்களது ரேங்கிங் போதுமானதாக இல்லாததால் நேரடியாக தகுதி பெற முடியவில்லை. பின் போபண்ணா–நாகலை முயற்சித்தோம். இதை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு(ஐ.டி.எப்.,) ஏற்கவில்லை. 

ஐ.டி.எப்., விதிமுறைப்படி போபண்ணா நேரடியாக தகுதி பெற முடியாது என்பதே உண்மை. இதை அறிந்திருந்தும் போபண்ணா, சானியா ஆதாரம் இல்லாமல் புகார் கூறியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?