Advertisement


சதம் விளாசினார் ராகுல் * கவுன்டி பயிற்சியில் கலக்கல்

ஜூலை 20, 2021 22:42
 Comments  
 


Kohli, Rahane rested for India warm up first class game against Select County XI
 

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: கவுன்டி லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் சதம் அடித்தார்.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4–செப். 14) பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் கவுன்டி லெவன் அணிக்கு எதிராக மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. கோஹ்லி, ரகானே, அஷ்வின், முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டது. ‘டாஸ்’ வென்ற ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

மயங்க் ஆறுதல்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித் (9) விரைவில் திரும்ப, மயங்க் அகர்வால் 28 ரன் எடுத்து போல்டானார். சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றி வரும் புஜாரா, நேற்றும் சொதப்பினார். இவர் 21 ரன்னுக்கு அவுட்டாகினார்.

ராகுல் கலக்கல்

அடுத்த ஹனுமா விஹாரி, லோகேஷ் ராகுல் இணைந்தனர். விஹாரி தன் பங்கிற்கு 24 ரன் மட்டும் எடுத்தார். மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்தார் ராகுல். வேகமாக ரன்கள் சேர்த்த இவர் சதம் விளாசினார். 101 ரன் எடுத்த போது ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். ஜடேஜா 75 ரன் எடுத்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. 

எதிரணியில் வாஷிங்டன் சுந்தர்

டெஸ்ட் தொடருக்கு தயாராக இந்திய அணி கவுன்டி லெவன் அணிக்கு எதிராக பயிற்சியில் போட்டியில் பங்கேற்கிறது. இதில் இந்திய வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் என இருவரும் கவுன்டி அணிக்காக விளையாடுகின்றனர்.

* கவுன்டி அணிக்காக விளையாடினாலும் போட்டியின் போது இந்திய ‘ஜெர்சி’ அணிந்திருந்தனர்.

* இடைவேளையின் போது இந்திய ‘டிரசிங் ரூம்’ வந்து விடுவர்.

கோஹ்லிக்கு காயமா

நேற்றைய பயிற்சி போட்டியில் முதுகு பிடிப்பு காரணமாக கோஹ்லி, இடது தொடைப்பகுதியின் பின் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ரகானேயும் களமிறங்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் இவர்கள் தயாராகி விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?