Advertisement


ஐந்து விக்கெட் சாய்த்தார் சதீஷ்

ஜூலை 20, 2021 22:17
 Comments  
 


TNPL Cricket, tamil nadu
 

சென்னை: சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதிய டி.என்.பி.எல்., போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 

தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடக்கிறது. அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கின்றன. நேற்றைய போட்டியில் திருப்பூர், சேப்பாக்கம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேப்பாக்கம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

சதீஷ் அபாரம்

திருப்பூர் அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. சேப்பாக்கம் அணியின் ராஜகோபால் சதீஷ், மிரட்டல் பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதலில் முதலில் தினேசை (0) ‘டக்’ அவுட்டாக்கிய சதீஷ், துஷார் (6), அரவிந்தையும் (7) அவுட்டாக்கினார். சித்தார்த் (1) நீடிக்கவில்லை. மீண்டும் மிரட்டிய சதீசிடம், இம்முறை பிரான்சிஸ் (0) சிக்கினார். ‘டாப்–7’ வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்ப, திருப்பூர் அணி 36 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 

கடைசி நேரத்தில் இணைந்த கேப்டன் முகமது, அஸ்வின் கிறிஸ்ட் சற்று ரன்கள் சேர்த்து கைகொடுத்தனர். திருப்பூர் அணி 16.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்த போது மழை காரணமாக பாதிக்கப்பட்டது. சேப்பாக்கம் அணியின் சதீஷ், 10 ரன்னுக்கு 5 விக்கெட் சாய்த்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?