Advertisement


‘வெண்கல நாயகன்’ ஜாதவ்

ஜூலை 20, 2021 19:10
 Comments  
 


1952 Helsinki Olympics, Finland, Khashaba Jadhav, Wrestling, Bronze Medal
 

சுதந்திர இந்தியாவுக்கு ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் முதல் பதக்கம் பெற்று தந்த பெருமை ஜாதவை சேரும். மல்யுத்தத்தில் மகத்தான வீரரான இவர், வெண்கலம் வென்று சாதித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலேஸ்வர் எனும் குக்கிராமத்தில் பிறந்தவர் தான் ஜாதவ். 1948ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் முதன்முறையாக பங்கேற்றார். இவருக்கு இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான மல்யுத்த விதிகள் இடையே உள்ள வேறுபாடு குறித்து அவ்வளவாக தெரியவில்லை. இதனால் 6வது இடமே பெற முடிந்தது.

பின் 1952ல் ஹெல்சின்கியில் நடந்த ஒலிம்பிக்கில் மீண்டும் களமிறங்கினார். பிரிஸ்டைல் 57 கி.கி., எடைப் பிரிவின் 5 சுற்றுகளில் தன்னை எதிர்த்தவர்களை வெறும் 5 நிமிடத்தில் வீழ்த்தினார். ஆறாவது சுற்றில் இவருக்கு சோதனை ஏற்பட்டது. இம்முறை ஜப்பானின் வலிமைமிக்க சோபாச்சி இஷியை சந்திக்க நேர்ந்தது. சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மோதலின் முடிவில் சோபாச்சி ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றும் ஜாதவுக்கு சோதனையாகத்தான் இருந்தது. இதில் சோவியத் யூனியனின் ரஷித் மமிடோகோவை எதிர்கொண்டார். ஜாதவ் மிகுந்த துணிச்சலுடன் போராடிய போதும் ரஷித்தை சமாளிக்க முடியவில்லை. இதனால் வெண்கலத்துடன் ஆறுதல் தேடினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?