Advertisement


மிதாலி மீண்டும் ‘நம்பர்–1’: ஒருநாள் போட்டி தரவரிசையில்

ஜூலை 20, 2021 19:02
 Comments  
 


ICC Ranking, Women Cricket, Mithali Raj, Shafali Verma, Number One, One Day, T20 Cricket
 

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய வீராங்கனை மிதாலி மீண்டும் முதலிடம் பிடித்தார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 762 புள்ளிகளுடன் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர், 9வது முறையாக முதலிடத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (701 புள்ளி), ஹர்மன்பிரீத் கவுர் (594) முறையே 9, 17வது இடத்தில் உள்ளனர். விண்டீஸ் அணி கேப்டன் ஸ்டெபானி டெய்லர், 736 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

‘பவுலிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி (5வது இடம், 694 புள்ளி), பூணம் யாதவ் (9வது இடம், 617 புள்ளி) ‘டாப்–10’ பட்டியலில் உள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (331 புள்ளி) 5வது இடத்தில் நீடிக்கிறார். இவர், ‘பவுலிங்’ தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளார்.

 

ஷபாலி ‘நம்பர்–1’: சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஷபாலி வர்மா (759 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 716 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறினார். ‘பவுலிங்’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (703 புள்ளி, 6வது இடம்), பூணம் யாதவ் (670 புள்ளி, 8வது) ‘டாப்–10’ பட்டியலில் உள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா (321 புள்ளி) 5வது இடத்தில் தொடர்கிறார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?