Advertisement


டோக்கியோவில் இறங்கியது இந்திய படை: ஒலிம்பிக் ‘ஜுரம்’ ஆரம்பம்

ஜூலை 18, 2021 23:14
 Comments  
 


Tokyo Olympics, Japan, India Squad, Badminton Team
 

டோக்கியோ: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களின் ஒரு பிரிவினர் நேற்று டோக்கியோவில் கால் பதித்தனர். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி(ஜூலை 23–ஆக. 8) நடக்க உள்ளது. 206 நாடுகளை சேர்ந்த 11,238 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா காரணமாக மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்க உள்ளன.

பலமான குழு: சுமார் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா சார்பில் 119 நட்சத்திரங்கள்(67 வீரர், 52 வீராங்கனைகள்) 18 வகையான போட்டிகளில் சாதிக்க காத்திருக்கின்றனர். பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய குழு செல்கிறது. ஹாக்கி அணியினர், பாட்மின்டன் வீராங்கனை சிந்து, ஆறு முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம், உலகின் ‘நம்பர்–1’ குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல், உலகின் ‘நம்பர்–1’ வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் நட்சத்திரங்கள் என 88 பேர் அடங்கிய ஒரு பிரிவினர் நேற்று முன் தினம் டில்லியில் இருந்து தனி விமானத்தில் கிளம்பினர். இவர்கள் நேற்று டோக்கியோ விமான நிலையம் வந்திறங்கினர். இந்திய குழுவினர் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, ‘மாஸ்க்’ அணிந்திருந்தனர். சிலர் கூடுதல் பாதுகாப்பிற்காக ‘பேஸ் ஷீல்டு’ அணிந்து வந்தனர். 

6 மணி நேரம்: இந்திய நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘கொரோனா பரிசோதனைகளுக்காக டோக்கியோ விமான நிலையத்தில் 6 மணி நேரம் காத்திருந்தோம். அனைவரும் சோதனையில் தேறினர். பின் ஒலிம்பிக் கிராமத்திற்கு சென்றோம்,’’என்றார். 

படகுப் போட்டி நட்சத்திரங்கள் நேத்ரா, வருண், மீரா பாய்(பளுதுாக்குதல்), துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்கள் ஏற்கனவே டோக்கியோ சென்றனர். அடுத்து சானியா மிர்சா(டென்னிஸ்), மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், நீரஜ் சோப்ரா(ஈட்டி எறிதல்) உள்ளிட்ட தடகள நட்சத்திரங்கள் டோக்கியோ செல்ல உளளனர்.

 

கொரோனா பீதி

டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000 ஆக உள்ளது. நேற்று ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதில் இருவர் தென் ஆப்ரிக்க கால்பந்து நட்சத்திரங்களான தபிசா மொன்யானே, கோமோஹலே மாஹ்லாட்சி. மற்றொரு வீரர் ஓட்டலில் ‘தனிமையில்’உள்ளார். தவிர தென் ஆப்ரிக்க கால்பந்து அணியின் வீடியோ பயிற்சி நிபுணர் மரியோ மாஷாவும் பாதிக்கப்பட்டுள்ளார்.  

ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்படைய ஒப்பந்ததாரர், பத்திரிகையாளர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் நடக்கின்றன. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ளவர்களுக்கு எவ்வித ‘ரிஸ்க்’ இல்லாமல் பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் உறுதி அளித்துள்ளார்.

 

பரீட்சை பதட்டம்

இந்திய குத்துச்சண்டை குழுவின் இயக்குநர் சான்டியாகோ நியவா கூறுகையில்,‘‘கொஞ்சம் பதட்டமாக உள்ளது. கடினமாக படித்த பின் இறுதி தேர்வை எழுதப் போகும் மனநிலையில் உள்ளோம். டோக்கியோவில் பதக்கம் வெல்ல தவறினால், நான்கு ஆண்டு கடின உழைப்பு வீணாகிவிடும். பயிற்சியை முறையாக முடித்துள்ளோம். இந்தியா சார்பில் பங்கேற்கும் 9 குத்துச்சண்டை நட்சத்திரங்கள் சாதிப்பர். இவர்கள், டோக்கியோ சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக உள்ளோம்,’’என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?