Advertisement


சானியா ஓய்வு எப்போது

ஜூலை 18, 2021 19:59
 Comments  
 


Sania Mirza, Tennis, India, Retirement, Tokyo Olympics
 

புதுடில்லி: ‘‘ஓய்வு பெறும் எண்ணம் தற்போது கிடையாது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன்,’’ என, சானியா தெரிவித்துள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 34. கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் 6 பட்டம் வென்றுள்ள இவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தரவரிசை அடிப்படையில் தகுதி பெற்றார். இதன் பெண்கள் இரட்டையரில் அன்கிதா ரெய்னாவுடன் இணைந்து களமிறங்க உள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் நான்கு முறை (2008, 2012, 2016, 2021) பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற காத்திருக்கிறார்.

 

ஓய்வு குறித்து சானியா கூறுகையில், ‘‘ஓய்வு பெறுவது குறித்து எனக்கு உண்மையாக தெரியாது. தற்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை. எனக்கு 34 வயதாகிறது. எத்தனை காலம் விளையாடுவேன் என்று தெரியாது. ஆனால் போட்டியில் 100 சதவீத முழுஉடற்தகுதியுடன் விளையாட விரும்புவேன். ஏதோ விளையாட வேண்டும் என்பதற்காக டென்னிஸ் விளையாட மாட்டேன். நான் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். எனவே தொடர்ந்து போட்டியில் பங்கேற்பேன்,’’ என்றார். ரியோ ஒலிம்பிக் அனுபவம், டோக்கியோவில் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?