Advertisement


தவான் ‘சூறாவளி’...இந்தியா ‘ஜாலி’: வீழ்ந்தது இலங்கை அணி

ஜூலை 18, 2021 18:57
 Comments  
 


India, Sri Lanka, First One Day International Cricket, Kuldeep Yadav, Ishan Kishan, Dhawan
 
கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான், கேப்டன் ஷிகர் தவான் அரைசதம் விளாச இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொழும்புவில் நடந்தது. இலங்கை அணியில் பானுகா ராஜபக்சா அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

குல்தீப் கலக்கல்: இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்ணான்டோ (33) சுமாரான துவக்கம் தந்தார். குல்தீப் வீசிய 17வது ஓவரில் மினோத் பானுகா (27), பானுகா ராஜபக்சா (24) அவுட்டாகினர். அடுத்து வந்த தனஞ்செயா டி சில்வா (14) நிலைக்கவில்லை. பின் இணைந்த சரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஜோடி நிதானமாக விளையாடியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது தீபக் சகார் ‘வேகத்தில்’ அசலங்கா (38) வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய இவரது பந்தில் ஹசரங்கா (8) அவுட்டானார்.

கருணாரத்னே ஆறுதல்: சகால் பந்தில் ஷனகா (39) அவுட்டாக, ரன் வேகம் குறைந்தது. இசுரு உதானா (8) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் சமிகா கருணாரத்னே அதிரடி காட்டினார். ஹர்திக் வீசிய 49வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், புவனேஷ்வரின் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்டார். ஆட்டத்தின் கடைசி பந்தில் துஷ்மந்தா சமீரா (13) ‘ரன்–அவுட்’ ஆனார்.

இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 262 ரன் எடுத்தது. கருணாரத்னே (43) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் சகால், குல்தீப், தீபக் சகார் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

பிரித்வி விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா, கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சமீரா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த பிரித்வி, இசுரு உதானா வீசிய 4வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது தனஞ்செயா டி சில்வா பந்தில் பிரித்வி (43 ரன், 24 பந்து, 9 பவுண்டரி) அவுட்டானார்.

இஷான் அபாரம்: அடுத்து வந்த அறிமுக வீரர் இஷான் கிஷான், சிக்சர் அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், தனஞ்செயா வீசிய 8வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார். அசலங்கா பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த இஷான் கிஷான், அறிமுக போட்டியில் அரைசதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த போது சந்தகன் பந்தில் இஷான் (59) அவுட்டானார்.

தவான் கலக்கல்: கருணாரத்னே வீசிய 24வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த தவான், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மணிஷ் பாண்டே, சந்தகன் பந்தில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது மணிஷ் (26) அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ஹசரங்கா வீசிய 34வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார்.

இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 263 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தவான் (86), சூர்யகுமார் (31) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை பிரித்வி ஷா வென்றார். இந்திய அணி 1–0 என, தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி கொழும்புவில் வரும் ஜூலை 20ல் நடக்கிறது.

 

சஞ்சு சாம்சன் காயம்

பயிற்சியின் போது முழங்காலில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முதல் ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவரது காயத்தின் தன்மையை பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2019க்கு பின்...

இந்திய ‘லெவன்’ அணியில் யுவேந்திர சகால், குல்தீப் யாதவ் இடம் பிடித்தனர். இதன்மூலம் 2019க்கு பின் (ஜூன் 30, எதிர்: இங்கிலாந்து, இடம்: பர்மிங்காம்) இவர்கள் இருவரும் இணைந்து ஒருநாள் போட்டியில் விளையாடினர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?