Advertisement


ஒலிம்பிக்கில் சுமித் நாகல் * ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்

ஜூலை 16, 2021 22:50
 Comments  
 


Tokyo Olympics, Sumit Nagal eligible for men singles tennis
 

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார் சுமித் நாகல்.

ஜப்பான் ஒலிம்பிக் டென்னிசில் இந்தியா சார்பில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அன்கிதா ரெய்னா மட்டும் பங்கேற்கின்றனர். தரவரிசையில் பின் தங்கியதால் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை,

தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க இருந்த ஆஸ்திரேலியாவின் டி மினார் கொரோனா காரணமாக விலகினார். இதையடுத்து இந்தியாவின் யூகி பாம்ப்ரிக்கு (127 வது இடம்) வாய்ப்பு வந்தது. இவர் முழங்கால் ஆப்பரேஷன் செய்துள்ளதால், இவருக்குப் பதில் 144 வது இடத்திலுள்ள இளம் வீரர் சுமித் நாகல் களமிறங்க காத்திருக்கிறார்.

இவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதால், இரட்டையரில் பங்கேற்கும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைக்கிறது. இதன் படி கலப்பு இரட்டையரில் சானியா மிர்சா, ஆண்கள் இரட்டையரில் போபண்ணாவுடன் இணைந்து சுமித் நாகல் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமித் நாகல் கடைசியாக பங்கேற்ற 6 சாலஞ்சர் தொடரில் 3ல் தான் காலிறுதிக்கு முன்னேறினார்.

அவர் கூறுகையில்,‘‘ஒலிம்பிக்கில் பங்கேற்பது தான் எனது இலக்கு. தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. 100 சதவீதம் திறமை வெளிப்படுத்துவேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?