Advertisement


டோக்கியோ ஒலிம்பிக்: கெர்பர் விலகல்

ஜூலை 15, 2021 22:39
 Comments  
 


Tokyo Olympic Tennis, Kerber, Germany, Pulled Out
 

பெர்லின்: டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இருந்து ஜெர்மனியின் கெர்பர் விலகினார்.

ஜெர்மனி டென்னிஸ் வீராங்கனை கெர்பர் 33. மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள இவர், சமீபத்தில் லண்டனில் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் அரையிறுதி வரை சென்றிருந்தார். இந்நிலையில் உடல் சோர்வு காரணமாக ஜப்பானில் வரும் ஜூலை 23ல் துவங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகினார். லண்டன் (2012) ஒலிம்பிக்கில் முதன்முறையாக களமிறங்கிய இவர், ரியோ ஒலிம்பிக் (2016) ஒற்றையரில் வெள்ளி வென்றிருந்தார்.

இதுகுறித்து கெர்பர் கூறுகையில், ‘‘லண்டன், ரியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்காக களமிறங்கியது என்றும் மறக்க முடியாது. தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றதால் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலக வேண்டியதாயிற்று. இது கடினமான முடிவு. எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. ஜெர்மனி நட்சத்திரங்கள் பதக்கம் வென்று சாதிக்க வாழ்த்துகிறேன்,’’ என்றார்.

ஏற்கனவே நடால் (ஸ்பெயின்), பெடரர் (சுவிட்சர்லாந்து), செரினா (அமெரிக்கா), சிமோனா ஹாலெப் (ருமேனியா) உள்ளிட்டோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?