Advertisement


தீபக் ஹூடா விலகல்

ஜூலை 15, 2021 22:37
 Comments  
 


Deepak Hooda, Baroda Cricket, Pulled Out
 

வதோதரா: பரோடா அணியில் இருந்து தீபக் ஹூடா விலகினார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா 26. ‘ஆல்–ரவுண்டரான’ இவர், உள்ளூர் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடினார். சமீபத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி தொடரின் போது பரோடா அணி கேப்டன் குர்னால் பாண்ட்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

இந்நிலையில் பரோடா அணியில் இருந்து தீபக் ஹூடா விலகினார். இவர், ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவதற்கு பரோடா கிரிக்கெட் சங்கம், ஆட்சேபனை இல்லை சான்று வழங்கியது. கடந்த 2013ல் உள்ளூர் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 46 முதல் தரம் (2908 ரன், 20 விக்கெட்), 68 ‘லிஸ்ட் ஏ’ (2059 ரன், 34 விக்கெட்), 131 ‘டுவென்டி–20’ (1834 ரன், 17 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர இவர், ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் (2014–15), ஐதராபாத் (2016–19), பஞ்சாப் (2020–) அணிகளுக்காக விளையாடினார்.

இதுகுறித்து இர்பான் பதான் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘தீபக் ஹூடா விலகியது பேரிழப்பு. முன்னாள் பரோடா வீரரான எனக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?