Advertisement


குறைந்தது மெஸ்சி சம்பளம் * பார்சிலோனா புதிய ஒப்பந்தம்

ஜூலை 14, 2021 22:37
 Comments  
 


Lionel Messi agrees Barcelona contract, accepts significant wage cut
 

மாட்ரிட்: பார்சிலோனா அணிக்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து விளையாட உள்ளார் மெஸ்சி. இவரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிகிறது.

அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி 34. கடந்த 2000 முதல் ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக விளையாடுகிறார். இதுவரை 778 போட்டிகளில் பங்கேற்று 672 கோல் அடித்துள்ளார். 20 ஆண்டுகளாக ஒரே அணியில் நீடித்து வந்த இவரது ரூ. 4,422 கோடி ஒப்பந்தம் ஜூன் 30 ல் முடிந்தது. இதனால் மெஸ்சி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், மான்செஸ்டர் சிட்டி அணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பார்சிலோனா அணியில் தொடர மெஸ்சி முடிவு செய்துள்ளார். கொரோனா காரணமாக பார்சிலோனா அணியின் செலவுகள் குறைக்கப்பட்டன. இதனால் மெஸ்சியும் தனது பழைய சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

அர்ஜென்டினா அணிக்காக முதல் கோப்பை (கோபா) வென்ற உற்சாகத்தில் உள்ள மெஸ்சி, தற்போது விடுமுறையில் உள்ளார். ஆக. 15ல் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பும் முன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?