Advertisement


டோக்கியோ ஒலிம்பிக்: பெடரர் விலகல்

ஜூலை 14, 2021 21:35
 Comments  
 


Tokyo Olympic Tennis, Roger Federer, Knee Injury, Pulled Out
 

லாசன்னே: டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்தின் பெடரர் விலகினார்.

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 39. கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 20 முறை பட்டம் வென்றுள்ள இவர், கடந்த ஆண்டு முழங்கால் காயத்துக்கு இரண்டு முறை ‘ஆப்பரேஷன்’ செய்தார். மீண்டும் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பிரெஞ்ச் ஓபனில் 4வது சுற்றோடு பாதியில் விலகிய பெடரர், சமீபத்தில் முடிந்த விம்பிள்டனில் காலிறுதி வரை சென்றிருந்தார்.

இந்நிலையில் பெடரர், முழங்கால் காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். சிட்னி ஒலிம்பிக்கில் (2000) முதன்முறையாக களமிறங்கிய இவர், 2004, 2008ல் நடந்த ஒலிம்பிக் துவக்க விழாவில் சுவிட்சர்லாந்து கொடி ஏந்தி வந்தார். பீஜிங் ஒலிம்பிக் (2008) ஆண்கள் இரட்டையரில் தங்கம் வென்ற இவர், லண்டன் ஒலிம்பிக்கில் (2012) ஒற்றையரில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ரியோ ஒலிம்பிக்கில் (2016) பங்கேற்கவில்லை.

இதுகுறித்து பெடரர் கூறுகையில், ‘‘விம்பிள்டன் போட்டியின் போது எதிர்பாராதவிதமாக எனது முழங்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலக வேண்டியதாயிற்று. இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ஏனெனில் ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்துக்காக பங்கேற்பது மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இம்முறை சுவிட்சர்லாந்து நட்சத்திரங்கள் நிறைய பதக்கம் வென்று சாதிக்க வாழ்த்துகிறேன். காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான பயிற்சியை ஏற்கனவே துவக்கிவிட்டேன். விரைவில் போட்டிக்கு திரும்புவேன்,’’ என்றார்.

ஏற்கனவே நடால் (ஸ்பெயின்), செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), நிக் கியரியாஸ் (ஆஸ்திரேலியா) உள்ளிட்டோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?