Advertisement


யூரோ கனவு அணி... ரொனால்டோவுக்கு இடமில்லை

ஜூலை 13, 2021 23:01
 Comments  
 


5 Italians, no Ronaldo in Euro 2020 team of the tournament
 

நியான்: யூரோ கனவு அணியில் ரொனால்டோவுக்கு இடம் கிடைக்கவில்லை.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை தொடர் தற்போது நடந்தது. இத்தாலி அணி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பை வென்றது. இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் ‘நம்பர்–1’ இடம் பெற்றார் போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ. 

இதனிடையே ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் தொடரின் ‘கனவு’ அணி தேர்வு செய்யப்பட்டது. இதில் ஐந்து இத்தாலி வீரர்கள் இடம் பெற்றனர். ‘கோல்டன் பூட்’ விருது வென்ற ரொனால்டோவுக்கு இதில் இடம் இல்லை. 

தவிர எம்பாப்வே (பிரான்ஸ்), லெவண்டோவ்ஸ்கியும் (போலந்து) சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து வீரர்கள் வாக்கர், மாகுயரே சேர்க்கப்பட்ட நிலையில் நான்கு கோல் அடித்த கேப்டன் ஹாரி கேன் புறக்கணிக்கப்பட்டார். 

இத்தாலி அணியில் இருந்து கோல் கீப்பர் கியான்லுகி, பொனுாச்சி, லியானார்டோ, ஜோரினோ உட்பட 5 பேர் இடம் பெற்றனர்.

அணி விவரம்: 

கோல் கீப்பர்: கியான்லுகி (இத்தாலி)

பின்கள வீரர்கள்: வாக்கர், மாகுயரே (இங்கிலாந்து), பொனுாச்சி, லியனார்டோ (இத்தாலி).

மத்திய கள வீரர்கள்: பியர்ரே (டென்மார்க்), ஜோரினோ (இத்தாலி), பெட்ரி (ஸ்பெயின்).

முன்கள வீரர்கள்: சியசா (இத்தாலி), லுகாகு (பெல்ஜியம்), ஸ்டெர்லிங் (இங்கிலாந்து).

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?