Advertisement


மாரடோனாவுக்கு சமர்ப்பணம் * கேப்டன் மெஸ்சி அறிவிப்பு

ஜூலை 12, 2021 22:21
 Comments  
 


Lionel Messi pays tribute to Diego Maradona after Copa America win
 

பியுனஸ் ஏர்ஸ்: கோபா கோப்பையை அர்ஜென்டினா, மாரடோனா, தனது குடும்பத்தினருக்கு அர்ப்பணித்தார் கேப்டன் மெஸ்சி.

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்க கால்பந்து பிரேசிலில் நடந்தது. மரக்கானா மைதானத்தில் நடந்த பைனலில் அசத்திய மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 1–0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

சர்வதேச அரங்கில் 28 ஆண்டுக்குப் பின் கோப்பை வென்று சாதித்தது. தவிர கேப்டன் மெஸ்சி, அர்ஜென்டினா அணிக்காக வென்ற முதல் சர்வதேச கோப்பை இது. நேற்று அனைவரும் நாடு திரும்பினர். மெஸ்சி, தனது சொந்த ஊரான ரோசாரியோ சென்றார். இங்கு மனைவி, குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து, வெற்றியை கொண்டாடினார்.

அவர் கூறியது:

வரலாற்று சாதனை செய்ய எனக்கு ஊக்கம் வழங்கிய குடும்பத்தினருக்கும், நான் நேசிக்கும் எனது நண்பர்களுக்கும், கடினமான கொரோனா காலத்திலும் எங்களுக்கு முழு ஆதரவு தந்த 4.5 கோடி அர்ஜென்டினா மக்களுக்கும் இந்த வெற்றியை சமர்பிக்க விரும்புகிறேன். ஜாம்பவான் மாரடோனாவுக்கும் கோபா கோப்பையை சமர்பிக்கிறேன். ஏனெனில் அவர் எங்கிருந்தாலும் எப்போதும் எங்களுக்கு துாண்டுகோலாக இருந்தார்.

இவ்வாறு மெஸ்சி கூறினார்.

ஆரவார வரவேற்பு

அர்ஜென்டினா வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். ரியோ டி ஜெனிரோ விமானநிலையத்தில் இருந்து பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர். சாலையின் இரு பக்கங்களிலும் திரண்ட மக்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். கொரோனா காரணமாக வீரர்கள் பஸ்சில் அமர்ந்து, ரசிகர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?