Advertisement


ஜோகோவிச் மீண்டும் சாம்பியன்: 20 கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை

ஜூலை 11, 2021 23:32
 Comments  
 


Wimbledon Tennis, Novak Djokovic, Champion, Most Grandslam Titles Winners, Federer, Nadal
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார்.

இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 9வது இடத்தில் உள்ள இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி மோதினர். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை பெரேட்டினி 7–6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஜோகோவிச், 2வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த இரு செட்களை 6–4, 6–3 என வென்றார்.

 

20வது கிராண்ட்ஸ்லாம்: மூன்று மணி நேரம், 24 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 6–7, 6–4, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் 6வது முறையாக கோப்பை வென்றார். தவிர இது, இவரது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 9 (2008, 2011–13, 2015–16, 2019–2021), பிரெஞ்ச் ஓபனில் 2 (2016, 2021), விம்பிள்டனில் 6 (2011, 2014–15, 2018–19, 2021), யு.எஸ்., ஓபனில் 3 (2011, 2015, 2018) முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் பகிர்ந்து கொண்டார்.

 

21 வெற்றி

ஜோகோவிச், இந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ச்சியாக 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனை தொடர்ந்து விம்பிள்டனிலும் கோப்பை வென்றுள்ள இவர், யு.எஸ்., ஓபனில் சாதிக்கும் பட்சத்தில் ‘காலண்டர் கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வெல்லலாம்.

 

ரூ. 17.60 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற ஜோகோவிச், கோப்பையுடன், ரூ. 17.60 கோடி பரிசுத் தொகை பெற்றார். பைனல் வரை சென்ற பெரேட்டினிக்கு ரூ. 9 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

 

சமீர் பானர்ஜி அபாரம்

ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் சமீர் பானர்ஜி 17, விக்டர் லிலோவ் மோதினர். அபாரமாக ஆடிய இந்திய வம்சாவளி வீரரான சமீர் பானர்ஜி 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் இவர், முதல் சுற்றோடு திரும்பினார்.

 

ரவி சாஸ்திரி வருகை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஜோகோவிச்–பெரேட்டினி மோதிய விம்பிள்டன் பைனலை காண நேரில் வந்தார். இதற்கான புகைப்படத்தை தனது ‘இன்ஸ்டாகிராமில்’ பதிவிட்டுள்ள இவர், ‘‘நம்பமுடியாத சிறந்த அனுபவம்,’’ என, தெரிவித்திருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?