Advertisement


ஆஹா மரியா...ஓஹோ மெஸ்சி: கோபா கோப்பை வென்றது அர்ஜென்டினா

ஜூலை 11, 2021 09:27
 Comments  
 


copa america football, brazil, neymar, argentina messi
 

ரியோ டி ஜெனிரோ: சர்வதேச அரங்கில் 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக கோப்பை வென்றது அர்ஜெர்ன்டினா. கோபா அமெரிக்க தொடர் பைனலில் 1–0 என பிரேசிலை வீழ்த்தியது. 

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்க கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்தது. ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் நேற்று பைனல் நடந்தது. உலகத் தரவரிசையில் 3 வது இடத்திலுள்ள நெய்மரின் பிரேசில் அணி, 8 வது இடத்திலுள்ள மெஸ்சியின் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.

போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் ஓட்டமெண்டியை ‘பவுல்’ செய்த பிரேசில் வீரர் பிரெட்டுக்கு ‘எல்லோ கார்டு’ கிடைத்தது. கடந்த காலிறுதி, அரையிறுதியில் இரண்டாவது பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய முன்னணி வீரர் ஏஞ்சல் டி மரியா, இம்முறை அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி, போட்டியின் துவக்கத்திலேயே களமிறக்கினார்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. போட்டியின் 21 வது நிமிடம் டி பால் நீண்ட துாரத்தில் இருந்து கொடுத்த பந்தை பெற்ற மரியா, அங்கிருந்த பிரேசில் பின்கள வீரர்கள் தியாகோ சில்வா, லோடி, மார்குயினோசை தாண்டி கொண்டு சென்றனர். அதே வேகத்தில், வேகமாக முன்வந்த கோல் கீப்பர் எடர்சன், தலைக்கு மேலாக பந்தை இடது காலால் உதைக்க, சூப்பர் கோலாக மாறியது. அர்ஜென்டினா அணி முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா கோல் கணக்கை சமன் செய்ய நெய்மர் உள்ளிட்ட பிரேசில் வீரர்கள் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் ஆனது. 

‘முதல்’ கோப்பை

கால்பந்து ‘ஜாம்பவான்’ அர்ஜென்டினாவின் மெஸ்சி, 2005 முதல் சர்வதேச அரங்கில் ஒரு கோப்பை கூட வென்று தந்தது இல்லை. 2014 உலக கோப்பை, 2007, 2015, 2016 கோபா தொடரின் பைனலில் தோல்வி தான் கிடைத்தது. தற்போது இவரது தலைமையிலான அணி, அர்ஜென்டினா அணிக்காக முதல் கோப்பை கைப்பற்றி அசத்தியது. இத்தொடரில் 4 கோல் அடித்த மெஸ்சி, சக வீரர்கள் 5 கோல் அடிக்க உதவினார். இவருக்கு தொடர் நாயகன், தொடரின் சிறந்த வீரர் விருது கிடைத்தது. ஏஞ்சல் டி மரியா, ஆட்ட நாயகன் ஆனார்.  

 

1993 க்குப் பின்...

அர்ஜென்டினா அணி கடைசியாக 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றிருந்தது. இதன் பின் உலக கோப்பை உட்பட சர்வதேச தொடர்களில் எவ்வித கோப்பையும் வெல்லவில்லை. தற்போது 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக கோபா  கோப்பை வென்று அசத்தியது.

 

15

கோபா அமெரிக்க தொடரில் 15 வது முறையாக சாம்பியன் ஆனது அர்ஜென்டினா. இத்தொடரில் அதிக கோப்பை வென்ற உருகுவேயின் (15) சாதனையை சமன் செய்தது. அடுத்த இடத்தில் பிரேசில் (9 முறை) உள்ளது. பராகுவே, சிலி, பெரு அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

 

65 கோல்

கோபா அமெரிக்கா கால்பந்தில் இம்முறை 28 போட்டியில், 65 கோல் பதிவானது.

* பிரேசில், அர்ஜென்டினா அணிகள் அதிகபட்சமாக தலா 12 கோல் அடித்தன.

* அர்ஜென்டினாவின் மெஸ்சி, கொலம்பியாவின் லுாயிஸ் டியாஸ் அதிகபட்சமாக தலா 4 கோல் அடித்தனர்.

* சகவீரர்கள் கோலடிக்க அர்ஜென்டினாவின் மெஸ்சி அதிகபட்சமாக 5 முறை உதவினார். பிரேசிலின் நெய்மர் 3 முறை கைகொடுத்தார்.

* நான்கு ‘சேம்சைடு’ கோல் பதிவாகின.

* ஏழு முறை ‘பெனால்டி கிக்’ வழங்கப்பட்டது. இதில் 6ல் கோல் அடிக்கப்பட்டது. ஒரு வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

 

விருதுகள்

* கோபா கால்பந்து தொடரில் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் பூட்’ விருதை அர்ஜென்டினாவின் மெஸ்சி தட்டிச் சென்றார்.

* சிறந்த கோல்கீப்பருக்கான ‘கோல்டன் கிளவுஸ்’ விருதை அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் கைப்பற்றினார்.

* தொடர் நாயகனுக்கான ‘கோல்டன் பால்’ விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.

* பைனலில் சிறந்த வீரருக்கான ஆட்ட நாயகன் விருதை அர்ஜென்டினாவின் டி மரியா வென்றார்.

 

கோல்கட்டாவில் கொண்டாட்டம்

கோபா கால்பந்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றதை கோல்கட்டாவில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அர்ஜென்டினா ‘ஜெர்சி’ அணிந்து, மெஸ்சியின் ‘பேனர்’, அர்ஜென்டினா நாட்டு கொடியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

மாரடோனா ஆசி

 அர்ஜென்டினா அணிக்காக 1986ல் உலக கோப்பை வென்று தந்தார் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா. கோபா தொடரில் இவர் இடம் பெற்ற அணி ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. 1991ல் அர்ஜென்டினா கோப்பை வென்ற போது, ஊக்கமருந்து பயன்படுத்தியதால் மாரடோனாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. 1993 ல் அர்ஜென்டினா சாதித்த போது, அணியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக மாரடோனா பங்கேற்கவில்லை. இவரது மறைவுக்குப் பின், மெஸ்சியின் அர்ஜென்டினா அணி கோபா தொடரில் கோப்பை வென்றுள்ளது.

 

‘பெஸ்ட்’ கோல் கீப்பர்

கோபா தொடரின் சிறந்த கோல் கீப்பராக அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினஸ் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்த கோல் கீப்பர் விருது பெற்ற முதல் அர்ஜென்டினா வீரர் ஆனார்.

 

மறக்க முடியுமா

அர்ஜென்டினா அணி மத்திய கள வீரர் ஏஞ்சல் டி மரியா 33. நேற்ற சிறப்பாக செயல்பட்ட இவர், 13 போட்டிக்குப் பின் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோல் அடித்து கோப்பை வெல்ல உதவினார். 

 

1000 ரசிகர்கள்

கோபா தொடர் இம்முறை கொலம்பியா, அர்ஜென்டினாவில் நடக்க இருந்தது. கடைசி 11 நாட்களுக்கு முன் கொரோனா காரணமாக பிரேசிலுக்கு மாற்றப்பட்டது. இங்கு 5,32,000 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் தொடரை நடத்த எதிர்ப்பு கிளம்பியது. 

தொடரில் பங்கேற்ற வீரர்கள் உட்பட பலருக்கு கொரோனா ஏற்பட்டது. இருப்பினும் தொடர் ரசிகர்கள் இல்லாமல் வெற்றிகரமாக நடந்தது.

பைனலில் 1000 ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வெற்றி மகிழ்ச்சியில் சமூக இடைவெளியை மறந்த ரசிகர்கள், ‘மாஸ்குகளை’ கழற்றி விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

குட்டீஸ் குதுாகலம்

மெஸ்சிக்கு தியாகோ, மடேயோ, சிரோ என மூன்று மகன்கள் உள்ளனர். மெஸ்சி கோப்பை வென்ற தருணத்தை வீட்டில் இருந்து கொண்டாடினர். அப்போது மெஸ்சி உள்ளிட்ட வீரர்கள் பாடிய ‘அர்ஜென்டினா போகலாம்’ என்ற பாட்டு பாடினர். மெஸ்சி மனைவி அன்டோனெலா ரோசிசிஜோ ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் இதை வெளியிட, 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்தனர்.

 

ஜூலை 10

 கடந்த 2016, ஜூலை 10ல் நடந்த யூரோ தொடரில் ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக முதல் சர்வதேச கோப்பை வென்று தந்தார்.

* தற்போது 2021, ஜூலை 10ல் கோபா தொடரில் மெஸ்சி, அர்ஜென்டினா அணிக்காக முதல் சர்வதேச கோப்பை கைப்பற்றி கொடுத்துள்ளார். 

 

12 கோல்

கோபா தொடரில் இம்முறை அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் அதிகபட்சம் 12 கோல் அடித்தன. 3 கோல் தான் எதிரணிக்கு விட்டுக் கொடுத்தன.

 

15வது முறை சாம்பியன்

கோபா அமெரிக்க தொடரில் 15 வது முறையாக சாம்பியன் ஆனது அர்ஜென்டினா. இத்தொடரில் அதிக கோப்பை வென்ற உருகுவேயின் (15) சாதனையை சமன் செய்தது. அடுத்த இடத்தில் பிரேசில் (9 முறை) உள்ளது. பராகுவே, சிலி, பெரு அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன. 

 

28 ஆண்டுகளுக்கு பின்...

அர்ஜென்டினா அணி கடைசியாக 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றிருந்தது. அப்போது மெஸ்சி 6 வயது சிறுவனாக இருந்தார். இதன் பின் உலக கோப்பை உட்பட சர்வதேச தொடர்களில் எவ்வித கோப்பையும் வெல்லவில்லை. தற்போது 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக கோபா  கோப்பை வென்று அசத்தியது.

 

* இந்திய அணி முதன் முறையாக கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை தொடரில் (1983) சாம்பியன் ஆனது. அடுத்து சச்சின் போன்ற ஜாம்பவான் அணியில் இடம் பெற்ற போதும் கோப்பை நழுவியது. கடந்த 2011 ல் இந்திய அணி சொந்தமண்ணில் சாதித்து, 28 ஆண்டுக்குப் பின் மீண்டும் உலக கோப்பை வென்றது. 

இதுபோல, 1993ல் கோபா வென்ற பின், அர்ஜென்டினா சர்வதேச கோப்பை வெல்லவில்லை. மெஸ்சிக்கு ஒரு கோப்பையும் கிடைக்கவில்லை. தற்போது 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக மெஸ்சியின் அர்ஜென்டினா சாம்பியன் ஆனது.

 

84 ஆண்டுகளுக்கு பின்

மரக்கானா மைதானத்தில் கடந்த 1937 முதல் நடந்த உலக கோப்பை, கோபா கோப்பை தொடர் பைனல்களில் பிரேசில் அணி தோற்றதே இல்லை. முதன் முறையாக 84 ஆண்டுக்குப் பின் பிரேசில் அணி நேற்று தோற்றது.

 

1950க்கு பின்

மரக்கானா மைதானத்தில் சர்வதேச போட்டிகளில் பிரேசில் அணி தோற்றது இல்லை. கடந்த 1950க்குப் பின் முதன் முறையாக நேற்று தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?