Advertisement


என்னை நீக்க முடியாது * அசார் ஆவேசம்

ஜூன் 17, 2021 22:09
 Comments  
 


Hyderabad Cricket Association suspends president Azharuddin over conflict of interest
 

ஐதராபாத்: ‘‘ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது,’’ என முகமது அசார் தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசார். சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கோர்ட் சென்று இதிலிருந்து மீண்டு வந்த இவர்   ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். 

இவருக்கும் அங்குள்ள நிர்வாகிகளுக்கும் மோதல் இருந்து வருகிறது. இதனிடையே அசார் ஆதாயம் பெறும் வகையில் இரட்டை பதவியில் இருந்து வருகிறார் என தெரிவித்த  ஐதராபாத் கிரிக்கெட் சங்க உயர் மட்டக் குழு, விசாரணை முடியும் வரை அவரை சங்கத் தலைவர், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. 

இதுகுறித்து அசார் கூறுகையில்,‘‘நான் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. முறைப்படி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை யாராவது ஐந்து பேர் இணைந்து பதவியில் இருந்து நீக்கி விட முடியாது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?