Advertisement


சாதிப்பரா இந்திய பெண்கள் * இங்கிலாந்து டெஸ்ட் இன்று துவக்கம்

ஜூன் 15, 2021 22:38
 Comments  
 


Seven year wait, Indian women return to Test cricket with clash against England
 

பிரிஸ்டல்: ஏழு ஆண்டுக்குப் பின் இந்திய பெண்கள் அணி இன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஒரு டெஸ்ட் (நான்கு நாள்), மூன்று ஒருநாள் (ஜூன் 27, 30, ஜூலை 3), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 9, 11, 14) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

கடைசியாக 2015ல் மைசூருவில் நடந்த டெஸ்டில் இந்தியா, தென் ஆப்ரிக்காவை வென்றது. தற்போது 7 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக இன்று டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ‘சீனியர்’ மிதாலி ராஜ் கேப்டனாக உள்ளார். இதுவரை 10 டெஸ்டில் பங்கேற்றுள்ளார்.

அப்போதிருந்த 7 வீராங்கனைகள் தற்போதுள்ள அணியில் உள்ளனர். துணைக் கேப்டன் ஹர்மன்பிரீத், ஸ்மிருதி மந்தனா, ஜுலன் கோஸ்வாமி என அனுபவ வீராங்கனைகள், இளம் ஷபாலி, பிரியா என ஒருவரும் சமீபத்தில் முதல் தர போட்டிகளில் கூட பங்கேற்காமல் உள்ளது பலவீனம்.

இருப்பினும் விளாசல் வீராங்கனை ஷபாலி, மந்தனாவுடன் இணைந்து வேகமான துவக்கம் தரலாம். அடுத்து மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் பேட்டிங்கில் பலம் சேர்ப்பர். பவுலிங்கில் ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி கைகொடுப்பர்.

இங்கிலாந்து அணி ஹெதர் நைட் தலைமையில் களமிறங்குகிறது. துணைக் கேப்டன் ஷிவர் உட்பட 6 வீராங்கனைகள் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் விளையாடிய அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர்.

 

சச்சின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,‘‘17 வயதான இளம் ஷபாலி, இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி. இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டில் இவர் முக்கிய நபராக திகழ்வார். இதற்கான ஆற்றல், தனது பேட்டிங்கால் ரசிகர்களை ஈர்க்கும் திறமை, அவரிடம் உள்ளது,’’ என்றார்.

 

36

இந்திய பெண்கள் அணி இதுவரை 36 டெஸ்டில் பங்கேற்றது. இதில் 5 வெற்றி, 6 தோல்வி, 25 ‘டிரா’ செய்தது.

* இங்கிலாந்து மண்ணில் பங்கேற்ற 8 டெஸ்டில் இந்தியா 2ல் (2004, 2014) வென்றது. 6ல் ‘டிரா’ செய்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?