Advertisement


யூரோ கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்

ஜூன் 10, 2021 21:47
 Comments  
 


Euro cup championship, ronaldo
 

ரோம்: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று ரோமில் துவங்குகிறது. இதில் புதிய ஹீரோவாக உருவெடுக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலக கோப்பை தொடருக்கு அடுத்து கால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழா யூரோ கோப்பை. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இத்தொடர் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பரவலுக்கு இடையே இன்று முதல் வரும் ஜூலை 11 வரை யூரோ கால்பந்து தொடர் நடக்கவுள்ளன. மொத்தம் 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் 12 அணிகள், 6 பிரிவுகளில் சிறந்த 4 அணிகள் என மொத்தம் 16 அணிகள் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு முன்னேறும். பைனல் வரும் ஜூலை 11ல் லண்டன், வெம்ளே மைதானத்தில் நடக்கவுள்ளது.

ரொனால்டோ எதிர்பார்ப்பு

நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல். பெபே, பாட்ரிசியோ என அணியில் எத்தனை முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும், ரொனால்டோவை 36, பெரிதும் நம்பியுள்ளது பலவீனம். யூரோ தொடரில் மூன்று முறை கோப்பை வென்றது ஜெர்மனி. அனுபவ கோல் கீப்பர் மானுவர் நுாயர், தாமஸ் முல்லர், ஹம்மல்ஸ் என முன்னணி வீரர்களுடன் களமிறங்குகிறது.

இதேபோல பிரான்சின் ‘சீனியர்’ பென்சிமா, எம்பாப்வே, போக்பா, கிரைஜ்மான் அணிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர். இத்தொடரின் ‘குரூப் ஆப் டெத்’ என்று அழைக்கப்படும் ‘எப்’ பிரிவில் இந்த மூன்று அணிகளும் இடம் பெற்றுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து நம்பிக்கை

‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி ஹாரி கேன் தலைமையில் நெருக்கடிகளை சமாளித்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவருக்கு முன்கள வீரர்கள் ராஷ்போர்டு, ஸ்டெர்லிங் உதவலாம். ‘பிபா’ தரவரிசையில் ‘டாப்–20’ இடத்திற்குள் உள்ள இத்தாலி (7), சுவிட்சர்லாந்து (13), வேல்ஸ் (17) என மூன்று வலுவான அணிகள் ‘ஏ’ குரூப்பில் உள்ளன.

இத்தொடரின் ‘கறுப்புக்குதிரை’ என வர்ணிக்கப்படும் துருக்கி, அணியும் சவால் கொடுக்க காத்திருக்கிறது. 2018 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம், வான் ஜிக் இல்லாமல் களம் காணும் நெதர்லாந்து, பலோடெல்லியின் இத்தாலி, கோப்பை வெல்லும் போட்டியில் உள்ளன. இன்று நடக்கும் முதல் மோதலில் இத்தாலி–துருக்கி மோத உள்ளன.

 

6

சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்களில் ரொனால்டோ (103) இரண்டாவதாக உள்ளார். இத்தொடரில் 6 கோல் அடிக்கும் பட்சத்தில் ஈரான் வீரர் அலி தயேய் (109) சாதனையை தகர்க்கலாம்.

* இத்தொடரில் இன்னும் ஒரு கோல் அடித்தால், யூரோ தொடரில் அதிக கோல் அடித்த மைக்கேல் பிளாட்டினியை (பிரான்ஸ்), ரொனால்டோ முந்தலாம். தற்போது இருவரும் தலா 9 கோல் அடித்துள்ளனர்.

 

11

யூரோ கோப்பை தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. 11 இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. அரையிறுதி, பைனல் போட்டிகள் லண்டனில் நடக்கும்.


இன்னொரு ‘ஸ்பெயின்’

இளம் வீரர்கள் அடங்கிய ஸ்பெயின் அணி கொரோனா பாதிப்பால் அவதிப்படுகிறது. கேப்டன் செர்ஜியோ, டீகோ லோரண்டே என இருவருக்கும் கொரோனா ஏற்பட, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

* ஒருவேளை அதிகளவு வீரர்கள் பாதிக்கப்பட்டால், போட்டியில் பங்கேற்க முடியாமல் போகலாம். இதனை தவிர்க்க, கூடுதலாக 11 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து 17 வீரர்கள் தனியாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ரூ. 89 கோடி

யூரோ கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 89 கோடி பரிசு கிடைக்கும். பைனலில் தோற்கும் அணி ரூ. 62 கோடி, அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளுக்கு ரூ. 44.32 கோடி கிடைக்கும்.

 

ஸ்பெஷல் விதிகள்

ஒரு அணியின் 23 பேரில் ஏதாவது ஒரு வீரர் தனிமைப்படுத்தப்பட நேர்ந்தால், அந்த அணி பங்கேற்கும் போட்டி திட்டமிட்டபடி நடக்கும். குறைந்தது 13 வீரர்கள் இருக்கும் வரை போட்டிகள் நடக்கும். * ஒருவேளை 11 வீரர்களுடன் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் போட்டி மாற்றி அமைக்கப்படும்.* அவ்வாறு மாற்றி அமைக்கப்படவில்லை என்றால், களமிறங்க முடியாத நிலையில் இருக்கும் அணி 3–0 என்ற கணக்கில் 0தோற்றதாக அறிவிக்கப்படும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?