Advertisement


மீண்டும் சாதிக்குமா போர்ச்சுகல் * ‘யூரோ’ கால்பந்து நாளை துவக்கம்

ஜூன் 09, 2021 22:59
 Comments  
 


Euro championship football, ronaldo
 

ரோம்: ரசிகர்கள் எதிர்பார்க்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நாளை ரோமில் துவங்குகிறது. முதல் போட்டியில் இத்தாலி, துருக்கி அணிகள் மோதவுள்ளன.

உலக கோப்பை தொடருக்கு அடுத்து கால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழா யூரோ கோப்பை. ஐரோப்பிய நாடுகள் மட்டும் பங்கேற்கும். கடந்த ஆண்டு நடக்க வேண்டிய இத்தொடர் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாளை துவங்கி ஜூலை 11 வரை கால்பந்து போட்டி களை கட்டவுள்ளன.

மொத்தம் 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் 12 அணிகள், 6 பிரிவுகளில் சிறந்த 4 அணிகள் என மொத்தம் 16 அணிகள் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு  முன்னேறும். பைனல் வரும் ஜூலை 11ல் லண்டன், வெம்ளே மைதானத்தில் நடக்கவுள்ளன. 

கடும் போட்டி

‘பிபா’ தரவரிசையில் ‘டாப்–20’ இடத்திற்குள் உள்ள இத்தாலி (7), சுவிட்சர்லாந்து (13), வேல்ஸ் (17) என மூன்று வலுவான அணிகள் ‘ஏ’ குரூப்பில் உள்ளது. இத்தொடரின் ‘கறுப்புக்குதிரை’ என வர்ணிக்கப்படும் துருக்கியும் (29) இதில் உள்ளதால், லீக் சுற்றில் கடும் மோதல் காணப்படும். நாளை நடக்கும் முதல் மோதலில் இத்தாலி–துருக்கி மோத உள்ளன. 

‘பி’ பிரிவில் டென்மார்க், ரஷ்யா, பின்லாந்து, பெல்ஜியம் அணிகள் உள்ளன. 2018 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம் சவால் தரலாம். ‘சி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து அணியில் முன்னணி வீரர் வான் டிஜிக் இல்லாமல் களமிறங்குகிறது. தவிர உக்ரைன், ஆஸ்திரியாவும் உள்ளன. அடுத்து இங்கிலாந்து அணி (‘டி’ பிரிவு) மீது பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

‘குரூப் ஆப் டெத்’

இத்தொடரில் மூன்று முறை கோப்பை வென்ற ஸ்பெயின் (‘இ’ பிரிவு), புதிய வீரர்களுடன் சாதிக்க தயாராகி வருகிறது. இதற்கு சுவீடன், போலந்து அணிகள் வழிவிடுமா எனத் தெரியவில்லை. நடப்பு சாம்பியன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல், 3 முறை சாம்பியன் ஜெர்மனி, பிரான்ஸ் என வலுவான அணிகள் உள்ள ‘எப்’ பிரிவை ‘குரூப் ஆப் டெத்’ என அழைக்கின்றனர். 

 

ரூ. 89 கோடி

யூரோ கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 89 கோடி பரிசு கிடைக்கும். பைனலில் தோற்கும் அணி ரூ. 62 கோடி, அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளுக்கு ரூ. 44.32 கோடி கிடைக்கும்.

 

இதுவரை சாம்பியன்கள்

யூரோ கோப்பை தொடர் 1960 முதல் நடக்கின்றன. இதுவரை நடந்த தொடர்களில் ஜெர்மனி (1972, 1980, 1996), ஸ்பெயின் (1964, 2008, 2012) அணிகள் அதிகபட்சம் 3 முறை கோப்பை வென்றன. அடுத்து பிரான்ஸ் (1984, 2000) இரு முறை கோப்பை வென்றது. ரஷ்யா (1960), இத்தாலி (1968), செக் குடியரசு (1976), நெதர்லார்ந்து (1988), டென்மார்க் (1992), கிரீஸ் (2004), போர்ச்சுகல் (2016) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.

 

11

யூரோ கோப்பை தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. 11 இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. அரையிறுதி, பைனல் போட்டிகள் லண்டனில் நடக்கும்.


ரசிகர்களுக்கு அனுமதி

போட்டிகள் நடக்கும் இடங்களில் அங்குள்ள அரசு விதிகளின் படி 25 முதல் 100 சதவீத ரசிகர்கள் மைதானங்களில் அனுமதிக்கப்படுவர். 

 

ஸ்பெஷல் விதிகள்

ஒரு அணியின் 23 பேரில் ஏதாவது ஒரு வீரர் தனிமைப்படுத்தப்பட நேர்ந்தால், அந்த அணி பங்கேற்கும் போட்டி திட்டமிட்டபடி நடக்கும். குறைந்தது 13 வீரர்கள் இருக்கும் வரை போட்டிகள் நடக்கும். 

* ஒருவேளை 11 வீரர்களுடன் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் போட்டி மாற்றி அமைக்கப்படும்.

* அவ்வாறு மாற்றி அமைக்கப்படவில்லை என்றால், களமிறங்க முடியாத நிலையில் இருக்கும் அணி 3–0 என்ற கணக்கில் 0தோற்றதாக அறிவிக்கப்படும். 


மிரட்டும் கொரோனா

யூரோ கோப்பை கால்பந்தில் களமிறங்கும் ஸ்பெயின் அணி கேப்டன் செர்ஜியோ பாஸ்குயட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இந்த அணியின் டீகோ லோரன்டேவுக்கும் கொரோனா ஏற்பட்டது. இதேபோல சுவீடன் அணியில் இரு வீரருக்கும் கொரோனா ஏற்பட்டது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?