Advertisement


கோட்டை விட்டது அர்ஜென்டினா

ஜூன் 09, 2021 22:53
 Comments  
 


Brazil wins, Argentina allows last minute draw in qualifiers
 

சாவ் பாலோ: உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் கொலம்பியாவுக்கு எதிராக, அர்ஜென்டினா கடைசி நிமிடத்தில் வெற்றியை கோட்டை விட்டது. 

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 2022ல் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி, கொலம்பியாவை சந்தித்தது. 3, 8 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ரொமேரோ, பரேடெஸ் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 2–0 என முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியில் கொலம்பிய வீரர் மரியல் (51வது) முதல் கோல் அடித்தார். போட்டியின் கடைசி ‘ஸ்டாப்பேஜ்’ நிமிடத்தில் (90+4வது) போர்ஜா ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா வெற்றி பறிபோனது. போட்டி 2–2 என ‘டிரா’ ஆனது. 

மற்றொரு போட்டியில் பிரேசில் 2–0 என பராகுவேயை வென்றது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?