Advertisement


‘சூப்பர்’ சுனில் செத்ரி * மெஸ்சியை முந்தினார்

ஜூன் 08, 2021 22:48
 Comments  
 


Chhetri overtakes Messi, one goal away from entering all time top 10
 

தோகா: கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த தற்போதுள்ள வீரர்களில் மெஸ்சியை முந்தினார் சுனில் செத்ரி.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 2022ல் நடக்க உள்ளது.இதற்கானஆசிய அணிகள் தகுதிச்சுற்று போட்டிகள் கத்தாரில் நடக்கின்றன.

‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, உலக கோப்பை தகுதி வாய்ப்பை இழந்து விட்டது.இருப்பினும் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றால் ஆசிய கோப்பை தகுதிச்சுற்றின் 3 வது சுற்றுக்கு முன்னேறலாம்.

இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்ற இந்தியா, 1 வெற்றி, 3 தோல்வி, 3 ‘டிரா’ செய்த இந்தியா 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் 15ம் தேதி ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ளது.

இதனிடையே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 36, 2 கோல் அடித்தார். இதையடுத்து, தற்போது விளையாடுபவர்களில், அதிக கோல் அடித்த வீரராக, அர்ஜென்டினாவின் மெஸ்சியை (143 போட்டி, 72 கோல்), முந்தி இரண்டாவது இடம் பெற்றார் சுனில் செத்ரி. இவர் 117 போட்டிகளில் 74 கோல் அடித்தார்.

முதலிடத்தில் போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். இவர் 174 போட்டியில் 103 கோல் அடித்துள்ளார். எமிரேட்ஸ் வீரர், அலி மஹூத் 90 போட்டியில் 73 கோல் அடித்து மூன்றாவது இடம் பெற்றுள்ளார். தவிர தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெற்று அசத்தினார். 

இவர், இன்னும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்களில் ‘டாப்–10’ இடம் பிடிக்கலாம்.

 

‘நம்பர்–2’

சர்வதேச கால்பந்து அரங்கில் தேசிய அணிக்காக தற்போது விளையாடுபவர்களில் அதிக கோல் அடித்த ‘டாப்–5’ வீரர்கள் விவரம்: 

வீரர்/அணி போட்டி கோல்

ரொனால்டோ/போர்ச்சுகல் 174 103

சுனில் செத்ரி/இந்தியா 117 74

அலி மஹூத்/எமிரேட்ஸ் 90 73

மெஸ்சி/அர்ஜென்டினா 143 72

லெவண்டோவ்ஸ்கி/போலந்து 118 66

 

‘டாப்–10’ 

வங்கதேச அணிக்கு எதிராக 2 கோல் அடித்த இந்தியாவின் சுனில் செத்ரி, தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெற்றார். இதன் விவரம்: 

வீரர்/அணி போட்டி கோல்

அலி தயேய்/ஈரான் 149 109

ரொனால்டோ/போர்ச்சுகல் 174 103

தகாரி/மலேசியா 142 89

புஸ்காஸ்/ஹங்கேரி 85 84

சிட்டாலு/ஜாம்பியா 111 79

சயீத்/ஈராக் 137 78

பீலே/பிரேசில் 92 77

கமாமோட்டோ/ஜப்பான் 76 75

பஷிர்/குவைத் 134 75

சுனில் செத்ரி/இந்தியா 117 74


பயிற்சியாளர் பாராட்டு

இந்திய அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில்,‘‘பலர் சுனில் செத்ரி எப்போது ஓய்வு பெறுவார் என கேட்கின்றனர். இவர் பயிற்சி, போட்டிகளில் இன்னும் 25 வயது வீரரைப் போல விளையாடுகிறார், கோல் அடிக்கிறார்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?