Advertisement


இந்தியா ‘சூப்பர்’ வெற்றி * இரண்டு கோல் அடித்தார் சுனில் செத்ரி

ஜூன் 07, 2021 22:53
 Comments  
 


fifa world cup football, india beat bangladesh
 

தோகா: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி 2–0 என வங்கதேசத்தை வீழ்த்தியது. 

   ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 2022ல் நடக்க உள்ளது. இதற்கான ஆசிய அணிகள் மற்றும் ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் கத்தாரில் நடக்கின்றன. ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, உலக கோப்பை தகுதி வாய்ப்பை இழந்து விட்டது. 

இந்நிலையில் நேற்று தர வரிசையில் 105வது இடத்திலுள்ள இந்திய அணி, 184 வது இடத்தில் இருக்கும் வங்கதேசத்தை சந்தித்தது. போட்டியின் 11வது நிமிடம் பிபின் சிங் கொடுத்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயன்றார் இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி. 20 வது நிமிடம் உடாண்டா சிங் அடித்த பந்து கோல் போஸ்ட்டை விட்டு விலகிச் சென்றது. 

35வது நிமிடம் ‘கார்னர் கிக்’ வாய்ப்பில் பிரண்டன் பெர்ணான்டஸ் கொடுத்த பந்தை தலையால் முட்டினார் சுனில் செத்ரி. இதை வங்கதேச வீரர்கள் எளிதாக தடுத்தனர். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில், 63வது நிமிடம் சுனில் செத்ரி தலையால் முட்டிய பந்து, கோல் போஸ்ட்டை விட்டு வலது புறமாகச் சென்றது. 

போட்டியின் 79 வது நிமிடம் ஆஷிக் குருனியன் கொடுத்த பந்தை பெற்ற சுனில் செத்ரி, அதே வேகத்தில் அப்படியே தலையால் முட்டி, கோலாக மாற்றினார். நான்கு போட்டிக்குப் பின் இவர் அடித்த முதல் கோல் இது. ஆட்டம் முடிவதற்கு சற்று முன், சுனில் செத்ரி (90+2 வது), இப்போட்டியின் இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

 

முதல் முறை

உலக கோப்பை 2022 கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா, நேற்று முதல் வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டியில் 1 வெற்றி, 3 தோல்வி, 3 ‘டிரா’ செய்த இந்தியா, 6 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. அடுத்து ஆப்கானிஸ்தானை (ஜூன் 15) வென்றால், ஆசிய கோப்பை தகுதிச்சுற்றின் 3 வது சுற்றுக்கு முன்னேறலாம். 

 

20 ஆண்டுக்குப் பின்...

கடைசியாக 2015ல் கயாம் அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதிச்சுற்றில் (பெங்களூரு) இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் பின் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு வெற்றி கூட பெறாத இந்தியா, நேற்று வங்கதேசத்தை வென்றது. 

* அன்னிய மண்ணில் நடந்த உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் 20 ஆண்டுக்குப் பின் இந்தியா பெற்ற முதல் வெற்றி இது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?