Advertisement


வெற்றியுடன் விலகினார் பெடரர் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் சோகம்

ஜூன் 06, 2021 22:47
 Comments  
 


French Open 2021, Roger Federer withdraws
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்ற பெடரர், தொடரில் இருந்து வெளியேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் ‘நம்பர்–8’ வீரர், சுவிட்சர்லாந்தில் பெடரர், ஜெர்மனியின் கோயப்பெரை எதிர்கொண்டார். முதல் செட்டை ‘டை பிரேக்கர்’ வரை சென்று 7–6 என கைப்பற்றினார் பெடரர்.

அடுத்த செட்டில் கோயப்பெர் 7–6 என வென்று பதிலடி தந்தார். அடுத்த இரு செட்டையும் கடும் போராட்டத்துக்குப் பின் பெடரர், 7–6, 7–5 என தட்டிச் சென்றார். 3 மணி நேரம், 39 நிமிட போட்டியின் முடிவில் பெடரர் 7–6, 6–7, 7–6, 7–5 என்ற கணக்கில் பெடரர் போராடி வெற்றி பெற்றார்.

திடீர் விலகல்

இதன் பின் திடீரென தொடரில் இருந்து விலகுவதாக பெடரர் அறிவித்தார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20 கோப்பை வென்ற இவர் கூறுகையில்,‘‘இரண்டு முழங்காலிலும் ஆப்பரேஷன் செய்து, ஒரு ஆண்டுக்குப் பின் இப்போது தான் சற்று மீண்டு வந்துள்ளேன். இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. எனது அணியினருடன் ஆலோசித்த பின், பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலக முடிவு செய்தேன்,’’ என்றார்.

செரினா தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், கஜகஸ்தானின் ரைபகினாவிடம் 3–6, 5–7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். பெலாரசின் அசரன்கா, ரஷ்யாவின் பவ்லிசென்கோவாவை எதிர்கொண்டார். இதில் அசரன்கா 7–5, 3–6, 2–6 என்ற கணக்கில் வீழ்ந்தார். 10 ஆண்டுக்குப் பின் பவ்லிசென்கோவா காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் படோசா, செக் குடியரசின் வன்ரோசோவாவை 6–4, 3–6, 6–2 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். ருமேனியாவின் சர்ஸ்டீயா, சுலோவாகியாவின் ஜிடன்செக்கிடம் 6–7, 1–6 என எளிதாக சரண் அடைந்தார்.


காலிறுதியில் போபண்ணா ஜோடி

ஆண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் பிரான்கோ ஜோடி, நெதர்லாந்தின் மாட்வீ, எல் சால்வடாரின் மார்செலோ ஜோடியை சந்திக்க இருந்தது. கடைசி நேரத்தில் நெதர்லாந்து ஜோடி வெளியேற, போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?