Advertisement


இந்திய மல்யுத்த வீரர் ‘சஸ்பெண்ட்’ * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்

ஜூன் 04, 2021 22:41
 Comments  
 


Olympic bound wrestler Sumit Malik fails dope test, provisionally suspended
 

புதுடில்லி: ஊக்கருந்து பயன்படுத்திய இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது கடினம். 

இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் 28. கடந்த 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட இவர், சமீபத்திய ஆசியா, ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்களில் தோற்றார்.

கடந்த மே மாதம் பல்கேரியாவின் சோபியாவில் நடந்த தகுதி போட்டியில் பைனலுக்கு முன்னேற, சுமித் மாலிக் (125 கி.கி.,) டோக்கியோ ஒலிம்பிக்கில் (ஜூலை 23–ஆக. 8) 125 கி.கி.,  பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இப்போட்டியின் போது சுமித் மாலிக்கிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட மருந்து பயன்படுத்தியது தெரியவர, போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை (‘சஸ்பெண்ட்’) விதிக்கப்பட்டது.  

முழங்கால் காயத்துக்கு இவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்தார். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்தியிருக்கலாம். அடுத்து ஜூன் 10ல் இவரது சிறுநீர் ‘பி’ சாம்பிள் சோதனை செய்யப்பட உள்ளது. இதில் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானால் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

இந்திய மல்யுத்த சங்க செயலர் வினோத் தோமர் கூறுகையில்,‘‘இது ஆச்சரியமாக உள்ளது. சுமித் மாலிக் தவறுதலாக மருந்தை பயன்படுத்தி இருக்கலாம். ‘பி’ சாம்பிள் முடிவுக்காக காத்திருக்கிறோம்,’’ என்றார். 

 

இரண்டாவது முறை

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் (2016), இந்திய வீரர் நரசிங் யாதவ் பங்கேற்க இருந்தார். கடைசி நேரத்தில் இவர் ஊக்கமருந்து சோதனையில் சிக்க, நான்கு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதேபோல சுமித் மாலிக்கும் தடையை சந்திக்க உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?