Advertisement


உலக கோப்பையில் ‘சூப்பர் சிக்ஸ்’ * அணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜூன் 02, 2021 22:43
 Comments  
 


ICC expands men world events, ODI WC to 14 teams, T 20 WC to 20 teams
 

துபாய்: ஒருநாள் உலக கோப்பை தொடரில் மீண்டும் ‘சூப்பர் சிக்ஸ்’ முறை கொண்டு வரப்படுகிறது. பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்த்தப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கூட்டம் வீடியோ கான்பெரன்சிங் வழியாக துபாயில் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் படி இந்தியாவில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்துவது குறித்த இறுதி முடிவெடுக்க, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு ஜூன் 28 வரை கால அவகாசம் தரப்பட்டது.

தவிர 2023–2031 வரையிலான ஐ.சி.சி., தொடர்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் படி,

* 2027, 2031 ஒருநாள் உலக கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கும். 54 போட்டிகள் நடக்கும். இரு பிரிவில் (தலா 7) முதல் மூன்று இடம் பெறும் அணிகள், 2003 தொடரைப் போல, ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறும்.

* இரு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆண்கள், பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் (2024, 2026, 2028, 2030) 20 அணிகள் பங்கேற்கும். தலா 5 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும். ‘டாப்–2’ அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு செல்லும். 55 போட்டிகள் நடக்கும்.

* 2017ல் கைவிடப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடத்தப்படும். ‘டாப்–8’ அணிகள் மட்டும் பங்கேற்கும் இத்தொடர் வரும் 2025, 2029ல் நடத்தப்படும்.

* 9 அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும். இரு ஆண்டுக்கு ஒருமுறை பைனல் (2025, 2027, 2029, 2031) நடக்கும்.

* 2025, 2029ல் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கும்.

* 2027, 2031ல் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?