Advertisement


கால்பந்து வீராங்கனைக்கு நிதியுதவி: விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

மே 23, 2021 23:38
 Comments  
 


Sangeeta Soren, Football, India, Financial Help, Sports Ministry
 

புதுடில்லி: ‘கொரோனா’ ஊரடங்கால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கால்பந்து வீராங்கனை சங்கீதா சோரனுக்கு விரைவில் நிதியுதவி அளிக்கப்படும் என, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கால்பந்து வீராங்கனை சங்கீதா சோரன். பூடான், தாய்லாந்தில் நடந்த 18, 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இந்தியாவுக்காக பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய இவர், கடந்த ஆண்டு சீனியர் இந்திய அணிக்கு தேர்வானார். ஆனால் ‘கொரோனா’ பரவல் காரணமாக போட்டிகள் ரத்தானதால் அறிமுக போட்டிக்காக காத்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள பாசமுடி என்ற கிராமத்தில் வசித்து வரும் சங்கீதாவின் தந்தை பார்வையற்றவர். இவரது அண்ணன் வேலை தேடி வருகிறார். சங்கீதாவும், அவரது அண்ணனும் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக வேலை எதுவும் இல்லை. இதனால் அவரது குடும்பம் நிதிநெருக்கடியில் தவிக்கிறது.

இதனை அறிந்த தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, சங்கீதாவுக்கு உதவும் படி, ஜார்க்கண்ட் மாநில அரசுக்கும், அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பிரபுல் படேலுக்கும் கடிதம் அனுப்பினார். தவிர, மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து சங்கீதாவுக்கு விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என, விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘சங்கீதாவுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனது அலுவலம் அவரை தொடர்பு கொண்டுள்ளது. நிதியுதவி விரைவில் அளிக்கப்படும்,’’ என, தெரிவித்திருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?