Advertisement


மூன்றாவது சுற்றில் ஆஷ்லே பார்டி: மாட்ரிட் ஓபன் டென்னிசில்

மே 01, 2021 23:20
 Comments  
 


Madrid Open Tennis, Ash Barty, Petra Kvitova, Iga Swiatek
 

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, செக்குடியரசின் கிவிட்டோவா முன்னேறினர்.

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, சுலோவேனியாவின் டமாரா ஜிடான்செக் மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய ஆஷ்லே பார்டி, 2வது செட்டை 1–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–3 என வென்றார். முடிவில் ஆஷ்லே பார்டி 6–4, 1–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 6–4, 7–5 என, ஜெர்மனியின் கெர்பரை வீழ்த்தினார்.

மற்ற 2வது சுற்று போட்டிகளில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் லாராவை தோற்கடித்தார். லாட்வியாவின் அனஸ்டாசிஜா செவாஸ்டோவா 6–3, 6–3 என, பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை வென்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?