Advertisement


பாண்ட்யா ‘பிரதர்ஸ்’ உதவி: ‘ஆக்சிஜன்’ செறிவூட்டி வாங்க

மே 01, 2021 22:50
 Comments  
 


Hardik Pandya, Krunal Pandya, Cricket, 200 Oxygen Concentrators, Donation
 

புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 200 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வாங்க மும்பை அணியின் ஹர்திக், குர்னால் பாண்ட்யா சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதவும் வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், பிரட் லீ, இந்தியாவின் ஷிகர் தவான், ஜெயதேவ் உனத்கட், விண்டீசின் நிக்கோலஸ் பூரன், ஐ.பி.எல்., ராஜஸ்தான், டில்லி அணிகள் சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக், குர்னால் பாண்ட்யா சகோதரர்கள், கிராமப்புறங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்க உள்ளனர்.

இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘‘தற்போதுள்ள கடினமான காலகட்டத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற தன்னலமற்று போராடி வரும் மருத்துவ குழுவினர், முன்கள பணியாளர்களுக்கு நன்றி. இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. எனவே அப்பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை நன்கொடையாக வழங்க நானும், என் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?