Advertisement


வார்னர் நீக்கம்... வில்லியம்சன் நியமனம்: ஐதராபாத் அணி கேப்டனாக

மே 01, 2021 20:02
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Hyderabad, David Warner, Kane Williamson, Captain
 

புதுடில்லி: ஐ.பி.எல்., ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கிய ஐதராபாத் அணி, இதுவரை விளையாடிய 6 லீக் போட்டிகளில் 5ல் தோல்வியை தழுவியது. ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இன்று டில்லியில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது.

இந்நிலையில் ஐதரபாாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் 2018–19ல், 26 போட்டிகளுக்கு (14 வெற்றி, 11 தோல்வி, ஒரு ‘டை’) ஐதராபாத் அணியை வழிநடத்தினார்.

தவிர, இன்றைய போட்டிக்கான ஐதராபாத் ‘லெவன்’ அணியில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வார்னருக்கு பதிலாக விண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த 6 போட்டியில் வார்னர், 3, 54, 36, 37, 6, 57 ரன் எடுத்திருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?