Advertisement


ஒசாகா, ஹாலெப் வெற்றி

ஏப்ரல் 30, 2021 22:35
 Comments  
 


Madrid Open Tennis, Naomi Osaka, Simona Halep
 

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஜப்பானின் ஒசாகா, ருமேனியாவின் ஹாலெப் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, சகவீராங்கனை மிசாகி டோய் மோதினர். முதல் செட்டை 7–5 என போராடி கைப்பற்றிய ஒசாகா, 2வது செட்டை 6–2 என தன்வசப்படுத்தினார். முடிவில் ஒசாகா 7–5, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6–0, 7–5 என, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டார்மோவை வென்றார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் பெலாரசின் அரினா சபலென்கா 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவாவை வீழ்த்தினார். கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 0–6, 6–1, 6–4 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை தோற்கடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?