Advertisement


ஜோகோவிச் விலகல்: மாட்ரிட் ஓபனில் இருந்து

ஏப்ரல் 28, 2021 19:54
 Comments  
 


Madrid Open Tennis, Novak Djokovic, Serbia, Pulled Out
 

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிசில் இருந்து செர்பியாவின் ஜோகோவிச் விலகினார்.

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் வரும் மே 2–9ல் நடக்கிறது. இதிலிருந்து ‛நடப்பு சாம்பியன்’, உலகின் ‛நம்பர்–1’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகினார். சமீபத்தில் முடிந்த செர்பிய ஓபனில் அரையிறுதியோடு திரும்பிய இவர், இந்த ஆண்டு இதுவரை 4 தொடர்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு தயாராகும்விதமாக இவர், ரோம், பெல்கிரேடில் நடக்கவுள்ள தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகோவிச் ‛டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛இந்த ஆண்டு மாட்ரிட் ஓபனில் பங்கேற்க முடியாமல் போனது, எனது நண்பர்களை சந்திக்க முடியாததிற்கு மன்னிக்கவும். இரண்டு ஆண்டுகளாக இத்தொடரில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம். அடுத்த ஆண்டு நிச்சயம் பங்கேற்பேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

கடந்த 2019ல் நடந்த இத்தொடரின் பைனலில் கிரீசின் டிசிட்சிபாசை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தார் ஜோகோவிச். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இத்தொடர் ரத்து செய்யப்பட்டதால் மாட்ரிட் ஓபனில் விளையாட முடியாமல் போனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?