Advertisement


ஆஷ்லே பார்டி சாம்பியன்

ஏப்ரல் 25, 2021 19:53
 Comments  
 


ashleigh party, tennis, australia, stuttgart, germany
 

 ஸ்டட்கர்ட்:  ஜெர்மனி கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி கோப்பை வென்றார்.

ஜெர்மனியில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, 7வது இடத்தில் உள்ள பெலாரசின் அரினா சபலென்கா மோதினர். முதல் செட்டை சபலென்கா 6–3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஆஷ்லே பார்டி 2வது செட்டை 6–0 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 6–3 என வென்றார்.

ஒரு மணி நேரம், 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆஷ்லே பார்டி 3–6, 6–0, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, இந்த சீசனில் இவர் வென்ற 3வது பட்டம். ஏற்கனவே மெல்போர்னில் நடந்த ‘யர்ரா ரிவர் கிளாசிக்’, மயாமி ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?