Advertisement


இந்திய வீரர்கள் தோல்வி

ஏப்ரல் 24, 2021 22:45
 Comments  
 


india tennis, gunneshwaran, sumit nagal
 

முனிக்: முனிக் ஓபன் டென்னிஸ் தகுதிச்சுற்றில் முதல் போட்டியில் இந்திய வீரர்கள் குன்னேஸ்வரன், சுமித் நாகல் தோல்வியடைந்தனர். 

ஜெர்மனியின் முனிக் நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கிறது. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தமிழக வீரர் குன்னேஸ்வரன், ஆஸ்திரியாவின் நோவக்கை சந்தித்தார்.

முதல் செட்டை 4–6 என இழந்த குன்னேஸ்வரன், அடுத்த செட்டை 6–3 என கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் 5–4 என முன்னிலையில் இருந்த குன்னேஸ்வரன், கடைசியில் 5–7 என நழுவவிட்டார். முடிவில் குன்னேஸ்வரன் 4–6, 6–3, 5–7 என்ற செட்கணக்கில் போராடி தோற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், சுலோவாகியாவின் கோம்பசை எதிர்கொண்டார். முதல் செட்டை 4–6 என இழந்த சுமித் நாகல், அடுத்த செட்டை 7–6 என வென்றார். கடைசி செட்டில் 1–6 என கோட்டை விட்டார். முடிவில் சுமித் நாகல் 4–6, 7–6, 1–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?