Advertisement


அரையிறுதியில் ஆஷ்லே பார்டி

ஏப்ரல் 23, 2021 22:09
 Comments  
 


Grand Prix Tennis, Germany, Ash Barty
 

ஸ்டட்கர்ட்: கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி முன்னேறினார்.

ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் நகரில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., போர்ஷே கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர். முதல் செட்டை பிலிஸ்கோவா 6–2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஆஷ்லே பார்டி, 2வது செட்டை 6–1 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 7–5 என போராடி வென்றார்.

இரண்டு மணி நேரம், ஒரு நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆஷ்லே பார்டி 2–6, 6–1, 7–5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?