Advertisement


இளமை வேகம்... தோனி விவேகம்: உடற்தகுதியில் மோகம்

ஏப்ரல் 20, 2021 21:35
 Comments  
 


Dhoni, Chennai, IPL 2021, T20 Cricket
 

மும்பை: ‘‘இளம் வீரர்கள் வேகமாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு நான் சவால் கொடுப்பது நல்ல விஷயம். என்னை உடற்தகுதி இல்லாதவன் என்று சொல்வதை விரும்பவில்லை,’’என தோனி தெரிவித்தார்.

மும்பையில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி(188/9), ராஜஸ்தானை(143/9) வீழ்த்தியது. இதில் பேட்டிங்கில் தடுமாறிய சென்னை கேப்டன் தோனி, 17 பந்தில் 18 ரன் எடுத்தார். முதல் 6 பந்தில் ஒரு ரன் தான் எடுத்தார். 39 வயதான இவரால் துடிப்பாக செயல்பட முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இது குறித்து தோனி கூறியது:

நீங்கள் நன்கு விளையாடிக் கொண்டிருக்கையில், உங்களை உடற்தகுதி இல்லாதவன் என சொல்வதை விரும்ப மாட்டீர்கள். என்னை பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு நிகராக செயல்பட வேண்டியுள்ளது. அவர்கள் வேகமாக செயல்படுகின்றனர். இதற்கு ஏற்ப நான் சவால் கொடுப்பது நல்ல விஷயம். செயல்திறனுக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்க முடியாது. 24 வயதில் நான் சிறப்பாக செயல்படுவேன் என உத்தரவாதம் அளிக்கவில்லை. இதே போல 40 வயதிலும் அளிக்க முடியாது. வயதாகும் போது உடலை ‘பிட்’ ஆக வைத்திருப்பது கடினமான காரியம். மக்கள் என்னை நோக்கி உடற்தகுதி இல்லாதவன் என்று சொல்லாமல் இருந்தாலே போதுமானது. முதல் 6 பந்துகளை மந்தமாக விளையாடினேன். இதுவே வேறு போட்டியாக இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இறுதியில் 188 ரன்கள் எடுத்தது திருப்தி அளித்தது

கடந்த தொடருடன் ஒப்பிடுகையில் இம்முறை நல்ல முன்னேற்றம் தெரிகிறது. பவுலர்கள் சவாலுக்கு தயாராக உள்ளனர். சாம் கர்ரான் உண்மையிலேயே சிறப்பாக பந்துவீசினார். ‘நக்குள்’ வகையில் வீசுவதில் தீபக் சகார் தடுமாறினார். ‘சுழலில்’ ஜடேஜா, மொயீன் அலி அசத்தினர்.

இவ்வாறு தோனி கூறினார்.

 

கலக்கல் கணிப்பு: கவாஸ்கர் பாராட்டு

ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கேப்டன் தோனி சரியாக கணித்தார். ஜடேஜா வீசிய போட்டியின் 10வது ஓவரில் ராஜஸ்தானின் ஜோஸ் பட்லர் அடித்த சிக்சர் பந்து, அரங்கின் கூரையில் சிக்கிக் கொள்ள, வேறு பந்து மாற்றப்பட்டது. முந்தைய பந்து பனிப்பொழிவால் ஈரமாக இருந்தது. இப்போது வேறு பந்து என்பதால், நன்கு உலர்ந்து இருந்தது. இது ஸ்பின்னர்களுக்கு சாதகமானது. பந்தை நன்கு பிடித்து வீசலாம். இதனை உணர்ந்து 12வது ஓவரை ஜடேஜாவுக்கு தந்தார். ‘உலர்ந்த பந்து...நன்கு சுழலும்’ என ஜடேஜாவுக்கு தோனி கொடுத்த ஆலோசனை ‘ஸ்டம்ப்ஸ் மைக்’ மூலம் கேட்டது. இதற்கு ஏற்ப ஜடேஜா வீசிய பந்து, நன்கு சுழன்று வந்து பட்லரின் ‘ஸ்டம்ப்சை’ தகர்த்தது.

இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,‘‘கேப்டனாக 200வது போட்டியில் களம் கண்ட தோனியின் வியூகம் அருமையாக இருந்தது. உலர்ந்த பந்து சுழலும் என்பதை சரியாக கணித்தார். அந்த தருணத்தில் ஜடேஜா, மொயீன் அலிக்கு வாய்ப்பு அளித்தார். உலர்ந்த பந்தில் ஸ்பின்னர்கள் சாதித்தனர். தரமான பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தினார். இதன் காரணமாக ஜடேஜா நான்கு கேட்ச், பல பவுண்டரிகளை தடுத்தார்,’’என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?