Advertisement


சென்னைக்கு கிடைக்குமா ‘ஹாட்ரிக்’ * கோல்கட்டாவுடன் பலப்பரீட்சை

ஏப்ரல் 20, 2021 21:27
 Comments  
 


IPL 2021, Chennai vs kolkata
 

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த இரு போட்டிகளில் அசத்திய சென்னை அணி மீண்டும் தனது வெற்றி நடையை தொடர காத்திருக்கிறது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, இயான் மார்கனின் கோல்கட்டாவை சந்திக்கிறது. ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை சாம்பியன் ஆனது சென்னை அணி. பங்கேற்ற 11 சீசனில் முதன் முறையாக எமிரேட்சில் ‘பிளே ஆப்’ செல்லாமல் (7 வது இடம்) திரும்பியது.

இம்முறையும் முதல் போட்டியில் தோற்க ரசிகர்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் அடுத்த இரு போட்டிகளில் பஞ்சாப், ராஜஸ்தானை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. புதிய வரவு மொயீன் அலி (108 ரன், 5 சிக்சர், 12 பவுண்டரி), அதிக ரன் எடுத்தது, அதிக பவுண்டரி, சிக்சர் அடித்த சென்னை வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். தவிர ரெய்னா (80), டுபிளசியும் (69)  பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர்.

துவக்க வீரர் ருதுராஜ் மூன்று போட்டியிலும் (5, 5, 10) ஏமாற்றினார். இவரது இடத்தில் உத்தப்பா, ஜெகதீசன் அல்லது கிருஷ்ணப்பா கவுதம் களமிறங்குவாரா என இன்று தெரியும். கேப்டன் தோனி இன்னும் ‘பார்மிற்கு’ திரும்பவில்லை என்றாலும் ஜடேஜா, சாம் கர்ரான், பிராவோ என கடைசி வரை சென்னை அணிக்கு நம்பிக்கை தருகின்றனர்.

மொயீன் ‘சுழல்’

பந்துவீச்சில் தீபக் சகார் (இதுவரை 4 விக்.,) இன்று விக்கெட் வேட்டைக்கு திரும்புவார் என நம்பலாம்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷர்துல் தாகூர் (10.4 ஓவர், 108 ரன்) ரன்களை வாரி வழங்குகிறார். சுழலில் மொயீன் அலி (4 விக்.,) நம்பிக்கை தருவது சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம். இவருடன் ஜடேஜாவும் சேர்ந்து கொள்வது கூடுதல் பலம். தவிர சாம் கர்ரான், பிராவோவும் தங்கள் பங்கிற்கு பவுலிங்கில் ஆறுதல் தருகின்றனர்.

ராணா பலம்

கோல்கட்டா அணி முதல் போட்டியில் ஐ தராபாத்தை சாய்த்து தொடரை வெற்றிகரமாக துவக்கியது. இதன் பின் மும்பை, பெங்களூருவுக்கு எதிராக தோற்றது. பேட்டிங்கில் நிதிஷ் ராணா (80, 57, 18) இதுவரை  இரண்டு அரைசதம் அடித்து விட்டார். மற்ற வீரர்களில் திரிபாதி (83), சுப்மன் கில் (69) தவிர வேறு யாரும் பெரியளவில் ஸ்கோர் எடுக்கவில்லை. கேப்டன் இயான் மார்கன் (38), தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் (32), ஆன்ட்ரி ரசல் (45), சாகிப் அல் ஹசன் (38) தொடர்ந்து சொதப்புகின்றனர். 

பந்துவீச்சை பொறுத்தவரையில் அனுபவ கம்மின்ஸ், ஜூனியர் பிரசித் கிருஷ்ணா மட்டும் (தலா 4 விக்.,) நம்பிக்கை தருகின்றனர். ஆன்ட்ரி ரசல் (6 விக்.,) ஒரு போட்டியில் 5 விக்கெட் சாய்த்தார். இதன் பின் பெரியளவு செயல்படவில்லை. தமிழக அணியின் வருண் சக்ரவர்த்தியின் (3 விக்.,) சுழல் எடுபடாதது கோல்கட்டா அணிக்கு சோகம் தான். 

 

15

சென்னை, கோல்கட்டா அணிகள் 24 போட்டிகளில் மோதின. இதில் சென்னை 15ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. கோல்கட்டா 9ல் வெற்றி பெற்றது.

* கடைசியாக இரு அணிகள் மோதிய 4 போட்டிகளில் சென்னை 3, கோல்கட்டா 1ல் வென்றன.

 

வருவாரா நடராஜன்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் நடக்கும் நடக்கும் போட்டியில் லோகேஷ் ராகுலின் பஞ்சாப் அணி, வார்னரின்  ஐ தராபாத்தை சந்திக்கிறது. ராகுல், மயங்க் அகர்வால், கெய்ல், தீபக் ஹூடா என பலர் பேட்டிங்கில் கைகொடுத்தாலும் பஞ்சாப் பவுலிங் தான் சுமாராக உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் களமிறங்கிய முதல் மூன்று போட்டியில் ஐ தராபாத் அணி தோற்றதே இல்லை. இம்முறை மூன்றிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

வார்னர், பேர்ஸ்டோவ், ேஹால்டர், வில்லியம்சன், ஜேசன் ராய், முகமது நபி, ரஷித் கான் பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் சரியான வீரர்களை தேர்வு செய்யாதது தோல்விக்கு காரணமாக உள்ளது. புவனேஷ்வர், விஜய் சங்கருடன், உள்ளூர் வீரர் ‘யார்க்கர்’ நடராஜன் இடம் பெற்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?