Advertisement


அரையிறுதியில் அருந்ததி: உலக யூத் குத்துச்சண்டையில்

ஏப்ரல் 20, 2021 18:47
 Comments  
 


World Youth Boxing Championship, Arundhati, Ankit Norwal, Sachin, Semi Final
 

கையல்ஸ்: உலக யூத் குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் அருந்ததி (69 கி.கி.,), அன்கித் நார்வல் (64 கி.கி.,) உள்ளிட்ட 7 பேர் முன்னேறினர்.

போலந்தின் கையல்ஸ் நகரில் உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இந்தியா சார்பில் 10 வீரர், 10 வீராங்கனைகள் என, 20 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 69 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அருந்ததி சவுத்தரி, உக்ரைனின் அனா செஸ்கோ மோதினர். அபாரமாக செயல்பட்ட அருந்ததி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானு 5–0 என, போலந்தின் குபிக்காவை தோற்கடித்தார்.

ஆண்களுக்கான 64 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்கித் நார்வல், பிரேசிலின் எசேக்கியல் டா குரூஸ் மோதினர். அசத்தலாக ஆடிய அன்கித் 5–0 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆண்களுக்கான 49 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிஷ்வாமித்ரா சோங்தம் 5–0 என, செர்பியாவின் ஓமர் அமெடோவிக்கை வென்றார்.

மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை சனமாச்ச சானு (75 கி.கி.,), இந்திய வீரர்களான சச்சின் (56 கி.கி.,), விஷால் குப்தா (91 கி.கி.,) வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இந்தியா சார்பில் இதுவரை 11 பேர் அரையிறுதிக்கு முன்னேறினர். ஏற்கனவே வின்கா (60 கி.கி.,), ஆல்பியா (+81 கி.கி.,), பூணம் (57 கி.கி.,), கிதிகா  (48 கி.கி.,) அரையிறுதிக்கு முன்னேறினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?