Advertisement


டில்லி ‘கில்லி’ தவான்: பஞ்சாப் அணியை பந்தாடினார்

ஏப்ரல் 18, 2021 22:51
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Punjab, Delhi, Dhawan
 

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘கில்லி’யாக விளையாடிய ஷிகர் தவான் 92 ரன் விளாச டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. டில்லி அணி பந்துவீச்சை துவம்சம் செய்த இவர்கள், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். லுாக்மேன் மெரிவாலா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய அகர்வால், அவேஷ் கான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 25 பந்தில் அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ராகுல், லலித் யாதவ் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அசத்திய அகர்வால், ரபாடா வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த போது மெரிவாலா பந்தில் அகர்வால் (69) அவுட்டானார்.

மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ராகுல், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். அவேஷ் கான் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ராகுல் (61), ரபாடா ‘வேகத்தில்’ வெளியேறினார். கிறிஸ் கெய்ல் (11), நிக்கோலஸ் பூரன் (9) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய தீபக் ஹூடா, ரபாடா, அவேஷ் கான் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார். வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் தமிழகத்தின் ஷாருக்கான், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. ஹூடா (22), ஷாருக்கான் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

தவான் கலக்கல்: கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா (32) நம்பிக்கை தந்தார். ஸ்டீவ் ஸ்மித் (9) ஏமாற்றினார். பவுண்டரிகளாக விளாசிய ஷிகர் தவான், ஐ.பி.எல்., அரங்கில் 43வது அரைசதமடித்தார். இவர், 49 பந்தில் 92 ரன் (13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அவுட்டானார். கேப்டன் ரிஷாப் பன்ட் (15) நிலைக்கவில்லை. ஷமி வீசிய 17 வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஸ்டாய்னிஸ், ரிலே மெரிடித் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 198 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் (27), லலித் யாதவ் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?