Advertisement


மும்பை ‘பிரம்மாஸ்திரம்’ பும்ரா: சேவக் புகழாரம்

ஏப்ரல் 18, 2021 22:38
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Jasprit Bumrah, Mumbai, Brahmastra, Sehwag, Boult
 

சென்னை: ‘‘பும்ரா எனும் பிரம்மாஸ்திரம் இருக்கும் வரை மும்பை அணியை யாரும் அசைக்க முடியாது,’’என சேவக் புகழாரம் சூட்டினார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி(150/5), ஐதராபாத்தை(137) வீழ்த்தியது.  இப்போட்டியின் ஒரு கட்டத்தில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 31 ரன்கள் மட்டும் தேவைப்பட்டன.  கடைசி நேரத்தில் பும்ரா ‘வேகத்தில்’ மிரட்ட, மும்பை பக்கம் வெற்றி திரும்பியது. போட்டியின் முக்கியமான 17 வது ஓவரில் 4 ரன் மட்டுமே கொடுத்து திருப்புமுனை ஏற்படுத்தினார். பும்ரா தனது 4 ஓவரில் 14 ரன்களே (1 விக்.,) விட்டுக் கொடுத்தார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் கூறியது:மும்பை அணியால் எதுவும் முடிகிறது. குறைந்த ஸ்கோர் எடுத்தால், எதிரணியை தங்களது கலக்கல் பந்துவீச்சால் கலங்கடித்து விடுகின்றனர். பெரிய இலக்குகளையும் எளிதாக ‘சேஸ்’ செய்கின்றனர். இதனால் தான் ஐ.பி.எல்., தொடரின் சிறந்த அணியாக திகழ்கிறது. பவுலிங்கில் பும்ரா, பவுல்ட், ராகுல் சாகர் மிரட்டுகின்றனர். குர்ணால் பாண்ட்யா ரன்களை வாரி வழங்கினால்,  உடனே போலார்டை அழைக்கின்றனர். ‘பிரம்மாஸ்திரம்’ போன்ற வலிமையான ஆயுதமாக பும்ரா திகழ்கிறார். கடைசி கட்ட ஓவர்களில் பட்டையை கிளப்புகிறார். இவர் இருக்கும் வரை மும்பை அணியை வீழ்த்த இயலாது.

இவ்வாறு சேவக் கூறினார்.

 

பெஸ்ட் பவுலர்

மும்பை அணியின் பவுல்ட் கூறுகையில்,‘‘பும்ராவின் துல்லியமான பந்து வீச்சு பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீச வரும் போதும் அணிக்கு என்ன தேவையோ அதை தெளிவாக செய்து விடுகிறார். கடைசி கட்ட ஓவர்களிலும் கைகொடுக்கிறார். இதுபோன்ற அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்துவதில் உலகின் ‘பெஸ்ட்’ பவுலர் பும்ரா தான். இவரது சிறப்பான செயல்பாடு காரணமாக எனது பணி எளிதானது. இத்தொடர் முழுவதும் நாங்கள் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த காத்திருக்கிறோம்,’’என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?