Advertisement


வெள்ளி வென்றார் தீபக் புனியா: ஆசிய மல்யுத்த போட்டியில்

ஏப்ரல் 18, 2021 22:16
 Comments  
 


Deepak Punia, Asian Wrestling Championship, Silver Medal
 

அல்மாட்டி: ஆசிய மல்யுத்த போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா (86 கி.கி.,) வெள்ளி வென்றார்.

கஜகஸ்தானில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 86 கி.கி., எடைப்பிரிவு தகுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் இசா ஷாபீவை (9–2) வீழ்த்திய இந்தியாவின் தீபக் புனியா, காலிறுதியில் தஜிகிஸ்தானின் பகோதுர் கொடிரோவ் (4–3), அரையிறுதியில் தென் கொரியாவின் குவானுக் கிம் (2–0) ஆகியோரை வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் தீபக் 0–10 என, ஈரானின் ஹசன் அலியாசமிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் 3வது பதக்கம் வென்றார். ஏற்கனவே 2 முறை (2019, 2020) வெண்கலம் கைப்பற்றி இருந்தார்.

 

ஆண்களுக்கான 92 கி.கி., வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீத் 11–8 என, உஸ்பெகிஸ்தானின் ரஸ்டாம் ஷோடீவை வீழ்த்தினார். ஆண்களுக்கான 61 கி.கி., வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ரவிந்தர் 4–14 என, கஜகஸ்தானின் இக்ரோம்ஜோனிடம் வீழ்ந்தார்.

ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ பிரிவில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?