Advertisement


‘பவுலிங்’ எடுபடல...‘ஏழரை’ பிடிக்கல: சென்னைக்கு ஒண்ணுமே புரியல

ஏப்ரல் 11, 2021 21:48
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Chennai, Stephen Fleming, Dhoni
 

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் முதல் சவாலில் சென்னை அணி சறுக்கியது. பவுலர்கள் சொதப்பியது, இரவு ஏழரை மணிக்கு போட்டி துவங்கியது வினையாக அமைந்தது. 

இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி(188/7), டில்லியிடம்(190/3) 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு ரெய்னா அரைசதம் கடந்து கைகொடுத்தார். இருப்பினும் பவுலர்கள் சொதப்பியதால், வெற்றியை ருசிக்க முடியவில்லை. 

இது குறித்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் கூறியது:

பவுலிங் தான் தலைவலியாக உள்ளது. டில்லிக்கு எதிராக இன்னும் சிறப்பாக பந்துவீசியிருக்க வேண்டும். வெளிநாட்டு ‘வேகங்களை’ தேர்வு செய்வதில் பிரச்னை உள்ளது. ஹேசல்வுட்(ஆஸி.,) விலகியது பின்னடைவு. இவருக்கு பதிலாக தேர்வான பெஹ்ரன்டார்ப்(ஆஸி.,) இன்னும் இந்தியா வரவில்லை. தென் ஆப்ரிக்காவின் நிகிடி தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இருவரும் அடுத்து நடக்க உள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் இடம் பெற மாட்டர். இந்திய ‘வேகங்களை’ வைத்து சமாளிக்க வேண்டியுள்ளது. பேட்டிங்கில் மீண்டது நல்ல விஷயம். இக்கட்டான நேரத்தில் ரெய்னா கைகொடுத்தார். 36 பந்தில் 54 ரன் விளாசி அசத்தினார். 

இம்முறை சொந்த ஊரில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது தொல்லையாக உள்ளது. சென்னை சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது எங்கள் அணி. இப்போது மும்பையில் விளையாட வேண்டியுள்ளது. இங்கு அதிக ஸ்கோர் எட்டுவது அவசியம் என்பதால், ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. விரைவில் மும்பை சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இடமாற்றம் மும்பை அணிக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. இவர்கள் சென்னையில் விளையாடிய போது சரியான வியூகம் அமைக்க முடியாமல் தடுமாறினர். 

இவ்வாறு பிளமிங் கூறினார்

‘ஏழரை’ துவக்கம்

சென்னை கேப்டன் தோனி கூறுகையில்,‘‘பவுலர்கள் தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. எதிரணி பேட்ஸ்மேன் பவுண்டரி அடிக்கக்கூடிய வகையில் பந்துவீசினர். தவறுகளில் இருந்து விரைவில் பாடம் படிப்பர் என நம்புகிறேன்.  முன்பு இரவு 8:00 மணிக்கு போட்டி துவங்கியது. இப்போது 7:30 மணிக்கு துவங்குகிறது. இது, முதலில் பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமானது. முதல் 30–40 நிமிடங்களுக்கு பனிப் பொழிவு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் பவுலர்களுக்கு சிரமம் இருக்காது. இரண்டாவது இன்னிங்சின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். பந்து ஈரமாவதால், பவுலர்களுக்கு பந்தை நன்கு பிடித்து வீசுவதில் சிரமம் ஏற்படும். மும்பையில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும்பட்சத்தில், முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களை எடுக்க வேண்டியது அவசியம்,’’என்றார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?