Advertisement


‘ரவுடி பேபி’ ராகுல் டிராவிட் * ரசிகர்கள் அதிர்ச்சி

ஏப்ரல் 10, 2021 22:50
 Comments  
 


rahul dravid, indra nagar gundu, cricket, india
 

பெங்களூரு: முன்னாள் கேப்டன் டிராவிட், ஆக்ரோஷமாக கார் கண்ணாடியை உடைத்த வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்திய அணி முன்னாள் கேப்டன் டிராவிட் 48. ஐ.பி.எல்., துவக்க நாளில், இவர் நடித்த ‘கிரெடிட் கார்டு’ விளம்பரம் வெளியானது. இதில் காரில் பயணிக்கும் டிராவிட், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார்.

இதனால் கோபம் ஆன அவர், வலது பக்கம் நின்ற கார் கண்ணாடி மீது ஓங்கி கையை வைத்து தட்டுகிறார். இடது பக்கம் திரும்பி மற்றொருவரை திட்டுகிறார். ‘ஸ்டியரிங்கை’ பிடித்து வேகமாக ஆட்டிய டிராவிட், கையில் பேட்டை எடுத்து, அருகில் இருந்த காரின் ‘சைடு மிரரை’ உடைக்கிறார். பிறகு காரின் மீது நின்று,‘ நான் தான் இந்திரா நகர் ரவுடி’ என கத்துகிறார். பெங்களூருவில் டிராவிட் வசிக்கும் பகுதியின் பெயர் இந்திரா நகர். பொறுமையான டிராவிட், விளம்பர படத்திற்காக பொங்கி எழுந்தது கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோஹ்லி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில் ,‘ டிராவிட் சாரின் இப்படி ஒரு பக்கத்தை பார்த்தது இல்லை,’ என்றார். இந்திய வீரர் நடராஜன் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ டிராவிட்டால் யாரோ சிலர் மோசமாக காயமடையப் போகின்றனர்,’ என நகைச்சுவையாக தெரிவித்தார்.

டிராவிட் வெளியிட்ட செய்தியில்,‘ மன்னித்துக் கொள்ளுங்கள். எனது பொறுமையை இழந்து விட்டேன்,’ என்றார்.

இதைப் பார்த்த தனியார் உணவு ‘டெலிவரி’ செய்யும் நிறுவனம் ஒன்று,‘இந்திரா நகரில் ரவுடி ஒருவர் கோபமாக திரிவதால், இன்று உணவு ‘டெலிவரி’ தாமதம் ஆகும்,’ என தெரிவித்தது. இதை உண்மை என நம்பிய பலர், அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டது வேடிக்கையான விஷயம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?