Advertisement


சென்னை ஆரம்பமே சரியில்லை * டில்லி அணியிடம் தோல்வி

ஏப்ரல் 10, 2021 21:27
 Comments  
 


IPL 2021 India, chennai vs delhi, dhoni, raina, dhawan
 

மும்பை: சென்னை அணிக்கு ஆரம்பமே சரியில்லை. டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 188 ரன்கள் குவித்த போதும், மோசமான பவுலிங், பீல்டிங் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் ஆறு மைதானங்களில் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ரிஷாப் பன்ட்டின் டில்லியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் பீல்டிங் தேர்வு செய்தார். 

மொயீன் நம்பிக்கை

சென்னை அணிக்கு அனுபவ டுபிளசி, இளம் ருதுராஜ் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. டுபிளசி ‘டக்’ அவுட்டாக, ருதுராஜ் 5 ரன் எடுத்தார். சென்னை அணி 7 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. மொயீன் அலி, ரெய்னா இணைந்தனர். அஷ்வின் பந்துகளை மாறி மாறி பவுண்டரிக்கு விரட்டினர். இருப்பினும் முதல் 8 ஓவரில் சென்னை அணி 48/2 ரன் தான் எடுத்தது. அஷ்வின் சுழலில் மொயீன் அலி (36) அவுட்டானார். 

ரெய்னா அரைசதம்

அஷ்வின், அமித் மிஸ்ரா பந்துகளை சிக்சர்களாக விளாசினார் ரெய்னா. இவர் 32வது பந்தில் அரைசதம் எட்டினார். அம்பதி ராயுடு 23 ரன்னில் அவுட்டானார். காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா, சந்தித்த முதல் இரு பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுபக்கம் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட ரெய்னா (56 ரன், 4 சிக்சர்), வீணாக ரன் அவுட்டானார். பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் களமிறங்கிய கேப்டன் தோனி (0), இரண்டாவது பந்தில் போல்டானார். 

கடைசி நேரத்தில் ஜடேஜா, சாம் கர்ரான் ஜோடி சேர்ந்து, 28 பந்தில் 51 ரன்கள் சேர்த்தது. சாம் கர்ரான் 34 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (26) அவுட்டாகாமல் இருந்தார்.

இரண்டு அரைசதம்

டில்லி அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. 38, 47 ரன்னில் பிரித்வி கொடுத்த ‘கேட்சை’ சான்ட்னர், ருதுராஜ் நழுவவிட, 27 வது பந்தில் அரைசதம் அடித்தார். மறுபக்கம் தவான், 35 பந்தில் அரைசதம் அடித்தார். ஓவருக்கு சராசரியாக 10 ரன்னுக்கும் மேல் எடுக்க (12 ஓவரில் 121 ரன்) வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது டில்லி. 

முதல் விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்த போது, ஒரு வழியாக பிரித்வி (72) அவுட்டானார். அடுத்து தவான் (85), ஸ்டாய்னிஸ் (14) கிளம்பிய போதும், டில்லி அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் (15) அவுட்டாகாமல் இருந்தார்.

 

தோனி ‘அட்வைஸ்’

நேற்று போட்டி துவங்கும் முன் ‘சீனியர்’ தோனி, ‘ஜூனியர்’ ரிஷாப் பன்ட் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டனர். ஆடுகளம் குறித்து தோனி கொடுத்த ஆலோசனையை கவனமாக கேட்டார் ரிஷாப். தவிர, சென்னை அணியின் புஜாரா, ரெய்னாவிடமும் சென்று ஆலோசித்தார்.

 

‘இளம்’ கேப்டன்

டில்லி அணி ‘ரெகுலர்’ கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தோள்பட்டை காயத்தால் விலகினார். இவருக்குப் பதில் ரிஷாப் பன்ட் 23, நேற்று கேப்டனாக களமிறங்கினார். இதையடுத்து கோஹ்லி (பெங்களூரு, 22 வயது, 187 நாள்), ஸ்டீவ் ஸ்மித் (ராஜஸ்தான், 22, 344 நாள்) (ரெய்னா (சென்னை, 23, 112 நாள்), ஸ்ரேயாஸ் ஐயருக்கு (டில்லி, 23, 141 நாள்) அடுத்து ஐ.பி.எல்., தொடரில் இளம் வயதில் கேப்டனாக களமிறங்கிய ஐந்தாவது வீரர் ஆனார் ரிஷாப் (23 வயது, 188 நாள்)

 

மூன்று அறிமுகம்

நேற்று சென்னை ஐ.பி.எல்., அணியில் அறிமுகம் ஆனார் மொயீன் அலி. டில்லி அணியில் டாம் கர்ரான், வோக்ஸ் அறிமுக வாய்ப்பு பெற்றனர்.

 

சகோதரர்கள் சவால்

இங்கிலாந்து அணியின் சகோதரர்கள் டாம் கர்ரான் 26, சாம் கர்ரான் 22. சென்னை அணிக்காக விளையாடும் சாம் கர்ரான் கூறுகையில்,‘‘எனது சகோதரருக்கு எதிராக விளையாடுவதால் எங்கள் அம்மா சற்று பதட்டமாக (‘டென்ஷன்’) இருப்பார்,’’ என்றார். இதற்கேற்ப நேற்று தம்பி சாம் கர்ரானுக்கு , ‘பவுன்சர்’ (16.5வது ஓவர்) வீசி மிரட்டினார் டில்லி அணிக்காக பங்கேற்கும் அண்ணன் டாம் கர்ரான்.

 

சின்ன தல’

சென்னை அணி கேப்டன் தோனியை ‘தல’ என்றும், துணைக் கேப்டன் ரெய்னாவை ‘சின்ன தல’ என்றும் செல்லமாக அழைப்பர். கடந்த சீசனில் எமிரேட்சில் இருந்து ரெய்னா திடீரென நாடு திரும்ப, சென்னை அணியின் பேட்டிங் பெரிதும் பாதித்தது. இம்முறை மீண்டும் அணிக்கு திரும்பிய ரெய்னா, முதல் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். தோனி உட்பட அனைத்து வீரர்களும் எழுந்து நின்று பாராட்டினர். ‘சின்ன தல இஸ் பேக்’ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.

 

தோனி ‘டக்’

ஐ.பி.எல்., அரங்கில் தோனியை ‘டக்’ அவுட்டாக்கிய நான்காவது பவுலர் ஆனார் அவேஷ் கான். இதற்கு முன் 2010ல் ஷேன் வாட்சன், டிர்க் நான்ஸ், 2015ல் ஹர்பஜன் சிங், தோனியை ‘டக்’ அவுட்டாக்கினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?