Advertisement


இந்திய ஜூடோ அணி விலகல்: இருவருக்கு ‘கொரோனா’ உறுதியானதால்

ஏப்ரல் 07, 2021 21:19
 Comments  
 


Tokyo Olympic Judo Qualification, India Squad Pulled Out, Corono Positve Isolated
 

புதுடில்லி: ஜூடோ நட்சத்திரங்களுக்கு ‘கொரோனா’ உறுதியானதால், ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இருந்து இந்திய அணி விலகியது.

கிர்கிஸ்தானில், டோக்கியோ ஒலிம்பிக் ஜூடோ போட்டிக்கான ‘ஆசிய–ஓசியானியா’ பிரிவு தகுதிச் சுற்று நடக்கிறது. இதற்காக 15 வீரர், வீராங்கனைகள், 4 பயிற்சியாளர்கள் கொண்ட இந்திய அணி கிர்கிஸ்தான் சென்றது. அங்கு, ஏப். 4ல் நடத்தப்பட்ட முதல் ‘கொரோனா’ பரிசோதனையில் அனைவருக்கும் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்தது. பின், ஏப். 5ல் நடத்தப்பட்ட 2வது பரிசோதனையில் அஜய் யாதவ் (73 கி.கி.,), ரித்து (52 கி.கி.,) என, இருவருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்திய அணியினர் ஓட்டல் ரூமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தொடரில் இருந்து இந்திய அணி விலகியது.

இப்போட்டியில் சுஷிலா தேவி (48 கி.கி.,), அவ்தார் சிங் (100 கி.கி.,) உள்ளிட்டோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி துரதிருஷ்டவசமாக விலகியது. இனி, வரும் மே மாதம் ரஷ்யாவில் நடக்கவுள்ள கிராண்ட் பிரிக்ஸ், ஜூன் மாதம் ஹங்கேரியில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்திய நட்சத்திரங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?