Advertisement


மேரி கோம், லவ்லினா தேர்வு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு

ஏப்ரல் 07, 2021 21:17
 Comments  
 


Asian Boxing Championship, New Delhi, India Women Squad, Mary Kom, Lovlina, Pooja Rani
 

புதுடில்லி: ஆசிய குத்துச்சண்டை தொடருகான இந்திய அணியில் மேரி கோம், லவ்லினா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

டில்லியில், வரும் மே 21–31ல் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதற்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் (51 கி.கி.,) தேர்வானார். கடந்த 2019ல் பங்கேற்காத இவர், இத்தொடரில் 5 தங்கம், ஒரு வெள்ளி என, 6 பதக்கம் வென்றுள்ளார். சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த தொடரில் வெண்கலம் வென்றிருந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை லவ்லினா, 69 கி.கி., எடைப்பிரிவு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கலம் கைப்பற்றிய இவர், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெண்கலம் (2017) வென்றுள்ளார்.

மற்ற எடைப்பிரிவு போட்டிகளுக்கு சாக்சி (54 கி.கி.,), ஜாஸ்மின் (57 கி.கி.,), சிம்ரன்ஜித் கவுர் (60 கி.கி.,), பூஜா ராணி (75 கி.கி.,), சவீட்டி (81 கி.கி.,), அனுப்மா (+81 கி.கி.,), பாசுமடாரி (64 கி.கி.,) தேர்வாகினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?