Advertisement


வீரர்களின் கடினமான காலம் * சவுரவ் கங்குலி கருத்து

ஏப்ரல் 06, 2021 22:41
 Comments  
 


Cricket in bio bubble is tough but Indian players are more tolerant, Sourav Ganguly
 

கோல்கட்டா: ‘‘கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது கடினம், ஆனால் இந்திய வீரர்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பதால் சமாளித்து விடுவர்,’’ என கங்குலி தெரிவித்தார்.

இந்தியாவில் 2020ல் கொரோனா பரவல் ஏற்பட்டதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகின. தள்ளிவைக்கப்பட்ட 13வது சீசன் ஐ.பி.எல்., எமிரேட்சிற்கு மாற்றப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் இந்திய வீரர்கள் எமிரேட்ஸ் சென்றனர். இதன் பின் ‘ஓட்டல்–மைதானம்–ஓட்டல்’ என வீரர்கள் வேறு எங்கும் செல்லாமல், கொரோனா பாதுகாப்பு வளையத்தில் முடங்கினர்.

பின், அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் 72 நாள் பயணம், மீண்டும் இந்திய மண்ணில் இங்கிலாந்து தொடர் என தொடர்ந்து பல மாதங்களாக பல வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர்.

இது ‘மனதளவில் கடினமாக உள்ளது,’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி கூறியது:

அன்னிய வீரர்களை விட நமது இந்திய அணியினர் அதிக சகிப்புத் தன்மை கொண்டவர்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, விண்டீஸ் என பல்வேறு அணி வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். அவர்கள், எளிதாக மனதளவில் சோர்ந்து விடுவர். கடந்த ஆறு, ஏழு மாதங்களாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடந்தன. இது மிக கடினம்.

ஓட்டலில் இருந்து மைதானம் சென்று போட்டி நெருக்கடியை சமாளிக்க வேண்டும், மீண்டும் ஓட்டலுக்கு திரும்ப வேண்டும். இந்த வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமானது. இதை நமது உடல் நலன் ஏற்றுக் கொள்ளாது, தவிர பாதுகாப்பிலும் ‘ரிஸ்க்’ தான். இதனால் தான், இந்திய தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலிய அணியினர் தென் ஆப்ரிக்கா செல்ல மறுத்தனர்.

விளையாட்டு, தொழில் என எதுவாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் எந்த உத்தரவாதமும் இல்லை. ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?